இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

முற்றிலும் புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தியாவை வந்தடைய இந்த லேண்ட் ரோவர் மாடல் மாதிரிகள் ஆரம்பித்துள்ளன.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

ரூ.70 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுவரும் 2020 டிஃபென்டர் இவ்வாறு முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், சிபியூ முறையில்தான் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் அறிமுக தேதியை உறுதி செய்த லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம், டீலர்ஷிப் மையங்களில் இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளது.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

இதனால் புதிய டிஃபென்டர் காரை முன்பதிவு செய்ய விரும்புவோர் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை நேரடியாக அணுகலாம். முன்னதாக புதிய டிஃபென்டரின் அறிமுகம் 2020 ஆகஸ்ட்டில் மேற்கொள்ள தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

ஆனால் கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வரவே இந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள புத்தம் புதிய டிஃபென்டரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 300 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் என்ற ஒற்றை கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படவுள்ளது. மற்ற லேண்ட் ரோவர் கார்களை போல் டிஃபென்டரும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கும் சேர்த்து லேண்ட் ரோவரின் நிலப்பரப்பு மறுமொழி அமைப்பை கொண்டுள்ளது.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

அதேபோல் இந்திய சந்தையும் குறை-வீல்பேஸ், 3-கதவு டிஃபென்டர் 90 மற்றும் நீண்ட-வீல்பேஸ், 5-கதவு டிஃபென்டர் 110 என்ற இரு டிஃபென்டர் மாடல் கார்களையும் பெற்றுள்ளது. இவை இரண்டும் லேண்ட் ரோவரின் சிறப்பு ஆஃப்ரோடு தொழிற்நுட்பங்களுடன் மற்ற லேட்டஸ்ட் தொழிற்நுட்பங்கள் மற்றும் வசதிகளை பெற்று வரவுள்ளன.

இந்திய மண்ணை வந்தடைந்தது 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்... வருகிற 15ஆம் தேதி அறிமுகம்..!

இவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 360-டிகிரி கேமிரா, நீர் அலைகளை உணர்ந்து செயல்படக்கூடிய சென்சார்கள், காற்று சஸ்பென்ஷன், ஆஃப்-ரோடு டயர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. சர்வதேச சந்தையில் இந்த லேண்ட் ரோவர் டிஃபென்டர் காருக்கு வழங்கப்படும் 170 ஆக்ஸஸரீகளை கொண்ட கஸ்டமைஸ்ட் செய்ய தேவையான ஆக்ஸஸரீகள் தொகுப்பை இந்திய வாடிக்கையாளர்களும் பெறலாம்.

Most Read Articles
English summary
New Land Rover Defender Arrived In India
Story first published: Tuesday, October 6, 2020, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X