2020 மஹிந்திரா தாரின் முதல் காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

புதிய மஹிந்திரா தாரின் முதல் மாதிரி கார் தொண்டுக்காக ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள மஹிந்திரா 2020 தார் மாடலை விற்பனைக்கு கொண்டுவருவதில் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 19) ஏலத்திற்கான பதிவுகள் திறக்கப்பட்ட நிலையில், ஏலம் வருகிற செப்டம்பர் 24-27 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த ஏலம் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நிதி திரட்டுவதற்காகவே என்றும், இதன் மூலம் கிடைக்கும் நன்கொடையை பிராண்ட், வாடிக்கையாளரின் விருப்ப தொண்டுக்கான தொகையாக அளிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

இந்த ஏலத்தில் உட்படுத்தப்படவுள்ள 2020 தார் மாடலானது வெளிப்புறத்தில் ‘தார் #1' என்ற கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட முத்திரையை பெற்றிருக்கும். மேலும் ஏலத்தில் தேர்வு செய்யப்படும் உரிமையாளரின் பெயரின் முதல் எழுத்தும் வாகனத்தில் பொறித்து தரப்படவுள்ளது.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

அதேபோல் உட்புறத்திலும் இருக்கைகளின் மீது போர்த்தப்பட்டிருக்கும் கவர்களும், டேஸ்போர்டில் வழங்கப்படும் அலங்கார தகடும் வரிசை எண் ‘1' உடன் வழங்கப்படும். இவை தவிர்த்த மற்ற இயந்திர பாகங்கள் அனைத்தும் வழக்கமான தார் மாடலை தான் ஒத்து காணப்படும்.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

ஏலத்தில் வெற்றி பெறுபவருக்கு நான்கு என்ஜின்-கியர்பாக்ஸ் தேர்வுகள், ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் இரு ட்ரிம் நிலைகள் உள்ளிட்டவை 6 விதமான வெளிப்புற நிறத்தேர்வுகளுடன் கொடுக்கப்படவுள்ளன. ரெட் ரேஜ், அக்வாமரைன், நாப்போலி பிளாக், கேலக்ஸி கிரே, மிஸ்டிக் காப்பர் மற்றும் பாறையின் பழுப்பு உள்ளிட்டவை இந்த நிறத்தேர்வுகளில் அடங்குகின்றன.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

ஏலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் மஹிந்திராவின் பொருந்தக்கூடிய தொகை ஆனது நாண்டி அறக்கட்டளை, ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரதமர் நிதியுதவி ஆகிய மூன்று அமைப்புகளில் ஏதேனும் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்படலாம்.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

ஆன்லைன் ஏலத்தை மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் (MFCW) நடத்தும் அதே வேளையில், ஏலத்தை எர்ன்ஸ்ட் & யங் என்ற லண்டனை சேர்ந்த நிறுவனம் நடத்தும். வருங்கால ஏலதாரர்கள் தங்களது பெயர்களை பதிவுசெய்யும்போது திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை குறிப்பிட வேண்டும்.

2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...

இரண்டாம் தலைமுறை ஆஃப்-ரோடருக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கப்படவுள்ளது. மேலும் அப்போதுதான் 2020 தாரின் விலைகளும் வெளியிடப்படவுள்ளன. நமக்கு தெரிந்தவரை இந்த மஹிந்திரா தயாரிப்பின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
First Mahindra Thar To Be Auctioned for charity. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X