பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

சுதந்திர தினம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் ஊரடங்கினால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் எளிதாக சமாளித்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 73 வருடங்கள் ஆன போதிலும் இந்தியா இன்னும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாடாகவே உள்ளது. இந்த நிலைப்பாடு ஜனாபதி பயன்படுத்தும் காரில் இருந்து நமது அன்றாட வேலைப்பாடுகள் அனைத்திலும் பிரதிப்பலிக்கிறது என்பது உண்மை.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

ஜனாபதியின் கார் என்று ஏன் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் என்றால், இது அவரது போக்குவரத்து தன்மையை மட்டும் குறிப்பிடாமல் ஒருவகையில் நம் ஒட்டுமொத்த நாட்டின் தரத்தையும் வெளிப்படுத்துகிறது. இதனால் தான் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்துகின்றனர்.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் எஸ்600 புல்மேன் கார்ட் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வருகிறார். சுமார் 21.3 இன்ச் நீளம் கொண்ட இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை தான் முந்தைய ஜனாதிபதிகளான பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரும் பயன்படுத்தினர்.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

முதன்முதலாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் மாடல் காரை பயன்படுத்திய இந்திய ஜனாதிபதி சங்கர் தயால் சர்மா ஆவார். 1992ல் இருந்து 1997 வரையில் இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்த இவர் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் டபிள்யூ140 மாடலை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தினார்.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்து காணப்பட்ட இந்த பென்ஸ் கார் கையெறி குண்டுகளில் இருந்து இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள் வரையில் தாங்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது. இதனாலேயே 1990, 2000ஆம் காலக்கட்டங்களில் வெளிநாடுகளை சேர்ந்த பெரும்பான்மையான முக்கிய பிரமுகர்களின் முதன்மை தேர்வாக இந்த கார் விளங்கியது.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் டபிள்யூ140 காரில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் வி8 வழக்கமான மாடல்களிலும், வி12 அதிகளவில் பாதுகாப்பை எதிர்பார்க்கும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் கார்களிலும் பொருத்தப்படுகின்றன.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

இன்னும் சொல்ல போனால் தயாரிப்பு நிறுவனம் பொருத்தும் பாதுகாப்பு வசதிகள் பாத்தாது என்று கூடுதல் பாதுகாப்பிற்காக கஸ்டமைஸ்ட் செய்து பயன்படுத்தி வருபவர்களும் உள்ளனர். இந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி சர்மாவின் காரிலும் கூடுதல் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

ஆனால் அவை என்னென்ன என்பது பாதுகாப்பு கருதி இப்போது வரையிலும் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. சங்கர் தயால் சர்மாவில் இருந்து கேஆர் நாராயணன், ஏபிஜே அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல் வரையில் இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் டபிள்யூ140 கார் தான் அதிகாரப்பூர்வ ஜனாதிபதியின் காராக பயன்பாட்டில் இருந்தது.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

பின்பு இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் தான் தனது பயன்பாட்டு காரை மெர்சிடிஸ்-மேபேக் எஸ்600 புல்மேன் (டபிள்யூ 220) ஆக அப்கிரேட் செய்தார். அதன்பின் ராம்நாத் கோவிந் ஜனாதிபதியான பிறகு இது டபிள்யூ221 வெர்சனாக அப்டேட் செய்யப்பட்டது.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

இவர் தனது காரை டபிள்யூ222 வெர்சனாக இந்த வருடத்தில் அப்கிரேட் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவை சமாளிக்க இந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். சங்கர் தயால் சர்மா தான் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் மாடலை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி என்பதை அறிந்து கொண்டோம்.

பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?

அவருக்கு முந்தைய ஜனாதிபதிகள் பயன்படுத்திய கார்கள் என்னென்ன என்று பார்த்தால், அது இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. இதில் பல கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாக தான் உள்ளன. இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் கார்டிலக், ஜீப் வில்லிஸ் என்ற இரு கார்களை பயன்படுத்தியுள்ளார்.

Most Read Articles

English summary
Independence Day: First President Of India To Use A Mercedes-Benz S-Class Limousine & The Cars Used Before It
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X