2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐந்து இருக்கை டிகுவான் மாடல் காரின் டீசல் என்ஜின் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள 2020 டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் பிஎஸ்6-க்கு இணக்கமான புதிய பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடல் கடந்த 2017 மே மாதத்தில் முதன்முறையாக ஐந்து இருக்கை வெர்சன் காராக இந்தியாவில் அறிமுகமானது. அப்போது இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை மட்டும் தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியிருந்தது. ஆனால் தற்போது புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் அடுத்த மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் இந்த டீசல் என்ஜின் தேர்வு நீக்கப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

டிகுவான் மாடலில் பெட்ரோல் என்ஜினை வழங்க இந்நிறுவனம் முடுவெடுத்திருப்பது டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றுவது செலவு அதிகமான பணியாக இருப்பது ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், முதன்மையான காரணமாக பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் டிகுவான் மாடலை பெட்ரோல் வேரியண்ட்டில் வாங்குவதற்கே விருப்பப்படுகின்றனர் என்பது உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

எம்யூவி ரக காரான டிகுவான், சமீபத்தில் ஆல்ஸ்பேஸ் என்ற கூடுதல் பெயருடன் எஸ்யூவி மாடலாக அறிமுகமானது. முந்தைய டிகுவான் மாடலை விட நீளமான வீல்ஸ்பேஸ் உடன் ஏழு-இருக்கை வெர்சன் காராக சந்தைக்கு வந்த இந்த கார் ரூ.33.12 லட்சத்தை ஆரம்ப விலையாக சந்தையில் கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

இந்த விலை, டிகுவான் 5-இருக்கை வெர்சன் மாடலை விட வெறும் ரூ.3-4 லட்சங்கள் மட்டும் தான் அதிகம். இதனால் தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் மாடலில் 7-இருக்கையை கொண்டுவர கடந்த சில மாதங்களாக தீவிரமாக பணியாற்றி வந்தது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலுக்கு சந்தையில் முக்கிய போட்டி மாடல்களாக டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹோண்டா சிஆர்-வி, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவை பார்க்கப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

இந்த 2020 எஸ்யூவி மாடலில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் ஒரே ஒரு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

ஆல்-வீல் ட்ரைவ் வசதியுடன் இயங்கிவரும் டிகுவானின் 5-இருக்கை வெர்சனுக்கு உண்டான காலி இடத்தை வருகிற மார்ச் 18ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ள ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை போன்று இந்தியாவில் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (சிபியூ முறையில்) விற்பனை செய்யப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.20 லட்சத்தில் நிர்ணயிக்கப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் டீசல் என்ஜின் நீக்கம்...!

ஒரே ஒரு வேரியண்ட்டுடன் சந்தைப்படுத்தப்படவுள்ள புதிய டி-ராக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 148 பிஎச்பி வரையிலான ஆற்றலை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.

Most Read Articles
English summary
Five-Seater Volkswagen Tiguan diesel to be discontinued
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X