உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

உலகின் முதல் பறக்கும் கமர்ஷியல் காரான பால்-வி லிபர்ட்டியின் சாலை உபயோகத்திற்கு ஐரோப்பாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

ஐரோப்பிய சாலை சேர்க்கை சோதனைகளை நிறைவு செய்ததை தொடர்ந்து அதிகாரப்பூர்வ லைசன்ஸ் தட்டுடன் ஐரோப்பிய சாலைகளில் இயங்க லிபெர்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சோதனைகளின் கீழ், பறக்கும் கார் 2020 பிப்ரவரி முதல் சோதனை தடங்களில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மற்றும் விரிவான ட்ரைவ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

இந்த சோதனைகளில் அதிவேக ஓவல்கள், பிரேக் மற்றும் ஒலி மாசு உமிழ்வு சோதனைகள் உள்ளிட்டவை அடங்கின்றன. இதுகுறித்து பால்-வி நிறுவனத்தின் முதன்மை தொழிற்நுட்ப அதிகாரி மைக் ஸ்டெக்கலன்பர்க் கூறுகையில், "இந்த மைல்கல்லை எட்டுவதற்கு நாங்கள் பல ஆண்டுகளாக சாலை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறோம்.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

இப்போது நாங்கள் அடையும் மகிழ்ச்சி மிகப்பெரியது. சாலை சேர்க்கை சோதனைகள் அனைத்தையும் மடிந்த இறக்கைகளை கொண்ட விமானம் நிறைவு செய்வது மிகவும் சவாலாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, ஒரு பறக்கும் காரை வெற்றிகரமாக தயாரிப்பது என்பது காற்று மற்றும் சாலை விதிமுறைகளுக்கு இணக்கமாக வடிவமைப்பதை உறுதி செய்வதாகும்.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

கடந்த சில மைல்கல்களுக்கும், பறப்பதற்கு லிபர்ட்டி சான்றிதழ் பெறுவதற்கும் தீவிரமாக பணியாற்றிய எங்கள் அணியினரின் ஆற்றலையும் உந்துதலையும் நான் உணர்கிறேன்" என கூறினார். பால்-வி முதன்முதலாக லிபர்ட்டியின் விலையை அதிகாரப்பூர்வமாக 2017ல் அறிவித்திருந்தது.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

அதனை தொடர்ந்து 2018ல் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பறக்கும் காரை தயாரிப்பு நிறுவனம் 2018ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தது. ஆனால் திட்டம் பெரிய அளவில் தாமதமாகியுள்ளது.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

2015ஆம் ஆண்டு முதல் பிஏஎல்-வி லிபர்ட்டி காரின் வடிவமைப்பு ஈசா (ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனம்) உடன் விமான சான்றிதழ் மூலம் சென்று வருவதாகவும், 2022ஆம் ஆண்டில் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் டச்சு நிறுவனம் கூறுகிறது. இறுதி 150 மணிநேர விமான சோதனை நடைபெறுவதற்கு முன்பு 1,200க்கும் மேற்பட்ட சோதனை அறிக்கைகள் முடிக்கப்பட வேண்டும்.

உலகின் முதல் பறக்கும் கார்!! ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

இதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்வது தொடங்கப்படும். இதற்கிடையில் முன்பதிவு எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு வளர்ந்து வருவதாக நிறுவனம் கூறுகிறது. வருங்கால பிஏஎல்-வி கார்ஃப்ளையர்களில் 80 சதவீதத்தினர் விமானப் போக்குவரத்துக்கு புதியவர்கள் என்பதால், அவர்களில் சிலர் பிஏஎல்-வி ஃப்ளைட்ரைவ் அகாடமியில் கைரோபிளேன் பறக்கும் உரிமத்திற்கான பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

Most Read Articles
English summary
PAL-V Liberty flying car gets road useage approval in Europe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X