இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ், இந்தியா ஆட்டோமொபைல் துறையின் முதல் அடுத்த-தலைமுறை மொபைலிட்டி ப்ளாட்ஃபாரம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனை முழுமையாக இந்த செய்தியில் காண்போம்.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

ஃபோர்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய ப்ளாட்ஃபாரத்தின் மூலம் எரிபொருள் என்ஜின் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் என இரு விதமான வாகனங்களையும் தயாரிக்க முடியும்.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

புதிய கட்டமைப்பு ப்ளாட்ஃபாரம் குறித்து ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ப்ராசன் ஃபிரோக்டியா கருத்து தெரிவிக்கையில், பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் காரணத்தினால் எங்களுக்கு வாடிக்கையாளரின் தேவையை மட்டுமில்லாமல் அவர்களது விருப்பங்களையும் அறிந்து அதற்கு ஏற்ற வாகனங்களை வழங்கும் கடமை உள்ளது.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

இந்த வகையில் தான் தற்போது இந்த புதிய ப்ளாட்ஃபாரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புத்தளம் வாகனங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும். இதனை எங்களது வாடிக்கையாளர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறோம் என கூறினார்.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

ஃபோர்ஸ் நிறுவனம் தனது டி1என் தயாரிப்பு மாடல்களை உலக தரத்திற்கு இணையாக உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய ப்ளாட்ஃபாரத்தின் மூலம் தயாரித்துள்ளது. இந்த மாடலின் தயாரிப்பிற்காக இந்நிறுவனம் எடுத்துக்கொண்ட கால அளவு 4 வருடங்களாகும். இந்த கட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் வாகனங்களில் பயணிகளின் சவுகரியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிகளுக்கு காற்றுப்பைகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, என்ஜின் இழுவை டார்க் கண்ட்ரோல் மற்றும் இஎஸ்பி போன்றவை மிகவும் பாதுகாப்பான பயணத்தை விரும்புவோர்க்காக இந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்ற டி1என் கான்செப்ட் வாகனங்களில் வழங்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

இந்தியா மட்டுமின்றி இந்த டி1என் கான்செப்ட் வாகனங்களை மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் சந்தைகளுக்கும் ஏற்ற விதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

100 ஸ்பெஷலிஸ்ட், பொறியியலாளர்கள் மற்றும் முதன்மை இயக்குனர்கள் குழுவாக இணைந்து இந்த டி1என் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய ப்ளாட்ஃபாரம் இறுதிக்கட்ட சோதனை மற்றும் ஒத்திசைவு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

இந்த கட்டமைப்பால் உருவாக்கப்படும் மாடல் கார்கள் புதிய டிசைன் அமைப்பையும், ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களையும் கொண்டுள்ளன. எல்இடி டிஆர்எல்களை பெற்றுள்ள அத்தகைய மாடல்கள், தனது பிரிவில் முதன்முறையாக ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் இலகுவான வழிக்காட்டுதல் தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டெயில் லேம்ப்களையும் கொண்டுள்ளன.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

2 பாக்ஸ் கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ப்ளாட்ஃபாரத்தின் மூலம் என்ஜினின் என்விஎச் லெவல்களை பயணிகள் வரையறுக்க முடியும். இவை மட்டுமின்றி குறுக்கு பரவளைய ஸ்ப்ரீங் உடன் உள்ள தன்னிச்சையான முன்புற சஸ்பென்ஷனையும் இந்த டி1என் கான்செப்ட் தனது பிரிவில் முதல் வாகனமாக பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

இந்த டி1என் கான்செப்ட் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 350 என்எம் டார்க் திறனை மாடலுக்கு வழங்குகிறது. டீசல் வேரியண்ட்கள் மட்டுமில்லாமல், பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் மற்றும் முழுவதும் எலக்ட்ரிக் வெர்சனிற்கு மாற்றப்பட்ட டி1என் கான்செட் மாடல்களும் இந்த புதிய கட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட ப்ளாட்ஃபாரத்திலா ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது...?

விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஃபோர்ஸ் டி1என் கான்செப்ட், இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி1என் கான்செப்ட் வாகனங்கள் அளவில் பெரியதாக உள்ளதால், அதிக நபர்களுடன் பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமாக இருக்கும்.

Most Read Articles

Tamil
English summary
Force Motors Unveils T1N Concept Vehicles Built On New Platform
Story first published: Friday, January 24, 2020, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more