எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ட்ராக்ஸ் க்ரூஸர் மாடலை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த வகையில் இந்த 2020 மாடல் தற்போது புனே-மும்பை நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

இணையத்தில் வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் விரைவில் சந்தைக்கு வரவுள்ள ட்ராக்ஸ் க்ரூஸர் மாடல் எந்தவொரு மறைப்பும் இன்றி சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இருப்பினும் இந்த சோதனை காரில் இருந்து விற்பனை கார் சிறிது மாற்றங்களையும் அப்டேட்களையும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

புதிய ட்ராக்ஸ் க்ரூஸர் மாடலின் மொத்த வெளிப்புற மற்றும் உட்புற பாகங்களின் டிசைன்களை ஃபோர்ஸ் நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. இதனால் இந்த 2020 ஃபோர்ஸ் மாடலின் முன்புறம் புதிய க்ரில், பம்பர் மற்றும் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டருடன் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது.

காரின் பின்புறம் சில மாற்றங்களுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்ஸ் உடன் காணப்படுகிறது. காரின் பாக்ஸி தோற்றம் முந்தைய மாடலில் இருந்து அப்படியே தொடர்ந்துள்ளது. இருப்பினும் காரின் கதவுகளை திருத்தியமைக்கப்பட்ட புதிய க்ரீஸ் லைன்ஸ் மற்றும் டிசைன்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

சக்கரங்களில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ஆர்ச்களும், ஃபுட்போர்டும் 2020 ட்ராக்ஸ் க்ரூஸருக்கு புத்துணர்ச்சியான வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. இதேபோல் உட்புறத்திலும் இந்த கார் புதிய டிசைனில் டேஸ்போர்டை கொண்டிருப்பதால் தற்போதைய ட்ராக்ஸ் க்ரூஸர் மாடலை விட மிகவும் ப்ரீமியமாக தோற்றமளிக்கிறது.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

உட்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மற்ற மாற்றங்களாக ட்யூல்-டோன் பெயிண்ட் தீம், ப்ளூ-லிட் பல தகவல்களை வழங்கக்கூடிய திரையுடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் மைய கன்சோலில் மார்க்கெட்டிற்கு பிறகான ஆடியோ சிஸ்டம் பொருத்தும் வகையிலான பகுதி உள்ளிட்டவை உள்ளன.

மேலும் முந்தைய மாடலில் மூன்று பாகங்களாக இருந்த காரின் பின்புற கண்ணாடி, இந்த 2020 மாடலில் சிங்கிள் பாகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி காற்று பரவும் விதமாக வெண்ட்ஸ் ரூஃப்-ல் பொருத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

மைய கன்சோலில் பொருத்தப்பட்ட பவர் விண்டோ ஸ்விட்ச்கள் மற்றும் ட்யூல்-டோனில் கேபின் உள்ளிட்டவை காரின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களால் விரைவில் அறிமுகமாகவுள்ள ட்ராக்ஸ் க்ரூஸர் மாடலில் சவுகரியமான கேபின் உணர்வை பெறலாம்.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

இயக்க ஆற்றலுக்கு 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.6 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 90 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்பங்கள் மற்றும் என்ஜின் அமைப்புடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் மாடலின் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் 2020 ட்ராக்ஸ் க்ரூஸர் கார் ப்ரேக்கிங் அமைப்பாக முன்புறத்தில் டிஸ்க் ப்ரேக்குகளையும் பின்புறத்தில் ட்ரம் ப்ரேக்குகளையும் கொண்டுள்ளது.

எந்தவொரு மறைப்பும் இன்றி ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 கார் சோதனை ஓட்டம்..!

இந்த புதிய க்ரூஸர் மாடலில் சஸ்பென்ஷன் சிஸ்டம், முன்புறத்தில் சற்று வலுவற்றதாகவும், பின்புறத்தில் வலுவாகவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் ஒட்டுனரையும் சேர்த்து மொத்தம் 13 நபர்கள் அமரலாம். அதாவது முன்புறத்தில் இருவர், மிடிலில் மூன்று இருக்கைகளும், 4 நபர்கள் அமர வகையில் இரு நீண்ட மேசைகள் காரின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மற்றப்படி இந்த காரின் இந்திய அறிமுகம் குறித்த எந்த தகவலையும் பெற முடியவில்லை. ஆனால் இந்த கார் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் இந்த 2020 மாடலின் அறிமுகம் குறித்த அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Force Trax Cruiser Production Spec Spied Testing Ahead Of Launch: Spy Pics & Details
Story first published: Friday, March 13, 2020, 20:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X