ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

ஜூன் மாத இறுதியில் அமெரிக்க சந்தையில் வெளியாகுவதற்கு முன்பாக ஃபோர்டு ப்ரோன்கோ மாடலின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

எஸ்யூவி மாடலாக ஆஃப்-ரோடு திறன் கொண்ட மாடல்களின் பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள புதிய ஃபோர்டு ப்ரோன்கோ மாடலுக்கு முக்கிய போட்டியாக பழமையான ஜீப் வ்ராங்க்லர் மாடல் தான் கருதப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் ப்ரோன்கோ மாடல், ஆஃப்-ரோட்டிற்கு எந்த வித வகையில் சிறந்தது என்பதை காட்டும் விதத்தில் சகதி மற்றும் செங்குத்தான பாதைகளில் இயக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் இந்த மாடலின் மூன்று விதமான முன்மாதிரிகளும் காட்டப்பட்டுள்ளன.

ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

இந்த மூன்று முன்மாதிரிகளில் இரு 4-கதவு மற்றும் ஒரு இரு-கதவு ப்ரோன்கோ மாடல்கள் அடங்கும். இந்த எஸ்யூவி மாடலில் 329 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.7 லிட்டர் வி6 ஈக்கோபூஸ்ட் என்ஜினை ஃபோர்டு நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த என்ஜின் தான் எஃப்-150 மாடலிலும் பொருத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

ப்ரோன்கோ நேஷன் யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவின் மூலம் ஆஃப்-ரோடு வாகனங்களை விரும்பும் அனைத்து வயதினரையும் கவர ஃபோர்டு நிறுவனம் முயற்சி செய்துள்ளது. இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் வெலியிடப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடலை இந்நிறுவனம் 2020 நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்த முதலில் திட்டமிட்டு இருந்தது.

ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

ஆனால் இந்த நிகழ்ச்சியும் மற்ற நிகழ்ச்சிகளை போல் கொரோனாவின் தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த மாதத்தில் வெளிவந்தாலும், புதிய ப்ரோன்கோ மாடலின் அறிமுகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

இதனால் இதற்கு முன்பாக ப்ரோன்கோ மாடலின் ஸ்போர்ட் வெர்சனை விற்பனைக்கு கொண்டுவர ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எஸ்கேப் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த ஸ்போர்ட் வெர்சன் அமெரிக்கா மட்டுமின்றி தென் அமெரிக்க சந்தைக்களுக்கும் விற்பனைக்கு செல்லவுள்ளது.

ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய எஸ்யூவி கார்.. விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது..

புதிய ப்ரோன்கோ எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்திய சந்தைக்காக புதிய சி-பிரிவு எஸ்யூவியை களமிறக்க ஃபோர்டு நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவது மட்டும் தெரியும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Bronco (Jeep Wrangler Rival) To Unveil This Month
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X