ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. அழகிய டிசைன், வலிமையான கட்டமைப்பு, மூன்று எஞ்சின் தேர்வுகள், நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருவதையொட்டி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் மட்டுமே பிஎஸ்-6 மாடலில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இதுவரை வழங்கப்பட்டு வந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் விற்பனையில் சோபிக்கவில்லை. எனவே, இந்த எஞ்சின் தேர்வை விலக்கிக் கொள்ள ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

பெட்ரோல் மாடலில் வழங்கப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறதாம். அதாவது, தற்போது உடனடியாக விற்பனைக்கு வராது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு என்று சில வாடிக்கையாளர் இருந்து வந்தனர். அதுபோன்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கும் ஃபோர்டு வசம் திட்டம் இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

அதாவது, மஹிந்திரா துணையுடன் உருவாக்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கிறது. இது நிச்சயம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் விஷயமாக இருக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புதிய பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகள் தவிர்த்து வேறு பெரிய அளவிலான எந்த மாற்றங்களும் இருக்காது என்று தெரிகிறது. அதேநேரத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலின் விலை கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியானது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய தலைமுறை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கலாம்.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Ford is gearing up to launch Ecosport SUV with BS-6 compliant engine options in Indian market very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X