ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதன்முதலாக இந்திய சந்தையில் 2013ல் சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக அறிமுகமானது. இந்த நிலையில்தான் தற்போது புதிய வேறுபட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை இந்த கார் பெறவுள்ளதாக தகவல் டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளது.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

இந்த புதிய தொடுத்திரை ஹெட் யூனிட் ஆண்ட்ராய்டு 4.2.2 இயக்க அமைப்பை (OS) அடிப்படையாக கொண்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த லேட்டஸ்ட் யூனிட்டின் வருகையினால் விண்டோஸ் ஃப்ளை ஆடியோ ஒஎஸ் அடிப்படையிலான தற்போதைய ஹெட் யூனிட் மாற்றப்படவுள்ளது.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

துரதிர்ஷ்டவசமாக விற்பனையில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஒஎஸ்-க்கு அப்கிரேட் செய்யப்படவில்லை. ஏனெனில் இவை இரண்டும் முற்றிலும் வித்தியாசமான ப்ளாட்ஃபாரத்தை சார்ந்தவை ஆகும்.

பிரிவில் மற்ற போட்டி மாடல்களுடன் ஒப்பிடும்போது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இன்ஃபோடெயின்மெண்ட் விஷயத்தில் சற்று பின் தங்கியே இருந்தது. இதனால் இந்த அப்டேட் உண்மையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு தற்சமயம் தேவைப்படும் ஒன்றாகும்.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

வை-பை இணைப்பு, கான்ஃபெரன்ஸ் அழைப்பு வசதி, ஆஃப்-லைன் வரைபடங்கள் உடன் நேரலையான ட்ராஃபிக்ஸ் அப்டேட்கள், ப்ளூடூத் கஸ்டமைசேஷன் மற்றும் ஓவர் தி ஏர் (OTA) அப்டேட்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கொண்டுவரப்படும் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஆஃப்-லைன் வரைபடங்களுக்காக எந்த எஸ்டி கார்டையும் உள் நுழைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

வழக்கம்போல் ஃபோர்டின் இன்-கார் இணைப்பு தொழிற்நுட்பமான ஃபோர்டு பாஸ்-ஐ பெற்றுவரும் இந்த புதிய சிஸ்டம், அதேபோல் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே அம்சங்களையும் வழக்கம்போல் கொண்டிருக்கவில்லை. ஈக்கோஸ்போர்டின் ட்ரெண்ட், ட்ரெண்ட்+, டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ ட்ரிம்களில் மட்டும் பொருத்தப்படவுள்ள இதே இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு தான் ஸ்கோடா ரேபிட் செடான் காரின் டாப் வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

ஈக்கோஸ்போர்டில் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை வழங்கவுள்ளதை இந்தியாவில் உள்ள தனது டீலர்ஷிப்களுக்கும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஷோரூம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட அறிக்கை தான் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் 122 பிஎச்பி பவர் மற்றும் 149 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக உள்ளன.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்பட, பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. 2013ல் அறிமுகமான இந்த சப்-4 மீட்டர் கார் அதன்பின் 2017ல் சிறிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை ஏற்றது.

ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு! தகவல்கள் கசிந்தன

இருப்பினும் அதன்பின் புதியதாக சந்தையில் அறிமுகமான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ கார்களினால் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரால் விற்பனையில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையை புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Ford EcoSport To Get New Android Based Touchscreen – Details Leak
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X