275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

அதிசக்திவாய்ந்த புதிய எஞ்சினுடன் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

பிரிமீயம் எஸ்யூவி மாடல்களில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் பெயரில் விற்பனையாகும் இந்த மாடல் வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனையில் உள்ளது.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

இந்த நிலையில், பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகரித்து ஃபார்ச்சூனருக்கும், எண்டெவருக்கும் கடும் சந்தைப் போட்டி இருந்து வருகிறது. சந்தைப் போட்டியை மனதில் வைத்து, எண்டெவர் எஸ்யூவியின் மதிப்பை அதிகரிக்கும் முயற்சிகளில் ஃபோர்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

அந்த வகையில், எண்டெவர் எஸ்யூவியில் அதிசக்திவாய்ந்த 2.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎஸ் பவரையும், 455 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

ஏற்கனவே, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வெளிநாடுகளில் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 247 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆனால், தற்போது அதைவிட அதிக சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வையும் ஃபோர்டு களமிறக்கி உள்ளது.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

அதேநேரத்தில், இந்தியாவில் தற்போது 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்தியாவில் டர்போ பெட்ரோல் மாடல்கள் தேர்வு இப்போதைக்கு வராது என்றே தெரிகிறது.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

ஏனெனில், தற்போது அடுத்த தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியானது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறு. அந்த மாடல் இந்தியா வரும்போது இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பரிசீலிக்கப்படலாம். எனவே, உடனடியாக இந்தியாவில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுவது சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளது.

பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்!

இதனிடையே, அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவிலும் அடுத்த சில மாதங்களில் வர இருக்கிறது. அப்போது நிச்சயம் எண்டெவர் மதிப்பை உயர்த்துவதற்கு அதிசக்திவாய்ந்த இந்த எஞ்சின் தேர்வுகள் தேவைப்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has launched new Endeavour SUV model with all new 2.3 petrol engine option in China.
Story first published: Friday, June 5, 2020, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X