ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

எண்டேவியர் மாடலுக்கான பேஸ்கேம்ப் என்ற பெயரை புதியதாக ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

புதிய ஸ்போர்ட் எடிசனின் அறிமுகத்தை தொடர்ந்து எண்டேவியரின் பேஸ்கேம்ப் எடிசனை ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதுபோல் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இதுகுறித்த ஆவண படங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதுதான்.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் விற்பனை செய்யும் எண்டேவியரை மற்ற நாட்டு சந்தைகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்துவருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த எவரெஸ்ட்டின் புதிய பேஸ்கேம்ப் எடிசனை இந்நிறுவனம் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

இந்த பேஸ்கேம்ப் எடிசன்கள் பொதுவாக ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற ஆக்ஸஸரீ தொகுப்புகளுடன் எஸ்யூவிக்கு முரட்டுத்தனமான தோற்றத்தில் வழங்கப்படுகின்றன. மேலும் இவை காரின் செயல்திறனையும் ஓரளவுக்கு மேம்படுத்தும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

சர்வதேச சந்தையில் எண்டேவியர் பேஸ்கேம்ப் எடிசன் காரில் நட்ஜ் பார், பொனெட் பாதுகாப்பான், ஸ்னோர்கில், டோ பார், எல்இடி லைட் பார், கருப்பு நிறத்தில் மேற்கூரையில் பொருட்களை வைப்பதற்கான பார்கள், பியோனீர் ரூஃப் ப்ளாட்ஃபாரம், வெயிலில் இருந்து காரை பாதுகாக்கும் பந்தல் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

இவை அனைத்தும் இந்தியாவில் இந்த பேஸ்கேம்ப் கார் அறிமுகமாகும்போது இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதன் சர்வதேச மாடலை போன்று இந்திய வெர்சனிலும் உட்புறம் மற்றும் இயந்திர பாகங்களில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஆஸ்திரேலியாவில் இதன் விலை வழக்கமான எவரெஸ்ட் காரை காட்டிலும் 2000 ஆஸ்திரேலியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.1 லட்சம்) அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

ஃபோர்டு எண்டேவியரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிம் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல் இதன் புதிய பேஸ்கேம்ப் எடிசனில் இந்த என்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்காது.

ஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா...? கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.35 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விற்பனையில் போட்டியாக இதன் தோற்றத்திற்கு ஒத்த டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி எடிசன் விளங்குகிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Endeavour Basecamp Name Trademarked In India
Story first published: Tuesday, September 29, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X