ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள எண்டேவியர் ஸ்போர்ட் எஸ்யூவி காரின் அறிமுக தேதி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் ஸ்போர்ட் வேரியண்ட்டின் டீசர் சமீபத்தில் வெளியிட்டப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஸ்பெஷல் எடிசன் சந்தையில் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

வழக்கமான எண்டேவியரில் இருந்து சில மாற்றங்களுடன் புதிய ஸ்போர்ட் எடிசன் கொண்டுவரப்படுகிறது. இருப்பினும் இந்த மாற்றங்கள் அனைத்தும் காஸ்மெட்டிக் அப்கிரேட்களாகவே இருக்கும். இதில் சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங்குகள் முக்கிய பங்கு வகிக்கும்.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

அதேபோல் முன்பக்க க்ரில்லில், பம்பரின் கீழ்பகுதியில், பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகளில், பின்புறத்தில் நம்பர் ப்ளேட் மற்றும் அலாய் சக்கரங்களில் உள்ளிட்டவற்றிலும் கருப்பு நிறத்தை எதிர்பார்க்கலாம். மேலும் காரின் பக்கவாட்டு படிக்கட்டுகளிலும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

காரை சுற்றிலும் ஸ்போர்ட் முத்திரை நிச்சயம் வழங்கப்பட்டிருக்கும். வெளிப்புறத்திற்கு ஏற்றாற்போல் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் உட்புறத்திலும் வழக்கமான எண்டேவியரில் இருந்து வேறுபடுவதற்காக கருப்பு - பழுப்பு என்ற ட்யூல்-டோன் நிறத்தில் கேபின் வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

இவை தவிர்த்து எண்டேவியரின் இந்த லிமிடேட் எடிசனில் வேறெந்த இயந்திர அப்கிரேட்டையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் அதே 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டீசல் என்ஜினுடன் தான் இந்த ஸ்பெஷல் எடிசனும் விற்பனையை துவங்கவுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

இந்த டீசல் என்ஜின் உடன் 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன் உடன் பிராண்டின் செலக்ட்-ஷிஃப்ட் தொழிற்நுட்பமும் வழங்கப்படவுள்ளது. இவை மட்டுமின்றி இதன் டாப் ட்ரிம்களுக்கு 4-சக்கர ட்ரைவ் சிஸ்டமும் கூடுதல் தேர்வாக தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.

ஃபோர்டு எண்டேவியருக்கு கூடுதல் பலம் சேர்க்க வருகிறது புதிய ஸ்போர்ட் எடிசன்... அறிமுக தேதி அறிவிப்பு

ஃபோர்டு எண்டேவியரின் விலை தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.29.99 லட்சத்தில் இருந்து ரூ.33.42 லட்சம் வரையில் உள்ளது. புதிய ஸ்போர்ட் வேரியண்ட் எண்டேவியரின் டாப் டைட்டானியம் ப்ளஸ் ட்ரிம்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதன் விலையை டாப் ட்ரிம்மை காட்டிலும் சிறிது அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
The Ford Endeavour Sport variant of the SUV will be launching on September 22, 2020. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X