Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 13 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தாய்லாந்து நாட்டு எவரெஸ்ட் காரில் முக்கியமான அப்கிரேட்கள்!! இந்திய ஃபோர்டு எண்டெவரிலும் தொடருமா?
எவரெஸ்ட் என்ற பெயரில் தாய்லாந்து நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் ஃபோர்டு எண்டெவர் மிக சிறிய அளவிலான அப்டேட்களை பெற்றுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் ஃபோர்டு எண்டெவர் பெரும்பான்மையான நாட்டு சந்தைகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பிரபலமான காராகவும் இது விளங்குகிறது.

இந்த வகையில் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படும் எண்டெவரில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களில் முக்கியமானவைகள் காரின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக தேன்கூடு வடிவில் வழங்கப்பட்டுள்ள க்ரில் அமைப்பு, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான எண்டேவர் ஸ்போர்ட்டில் பார்த்ததை போன்று உள்ளது.

இருப்பினும் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய க்ரில் அமைப்பை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டுவந்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் ‘எவரெஸ்ட்' முத்திரை தடிமனானதாக வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் பனியின் வெள்ளை மற்றும் டார்க் க்ரிஸ்டல் ப்ளூ என்ற இரு விதமான நிறத்தேர்வுகளையும் அங்கு எவரெஸ்ட் கார் பெற்றுள்ளது.

மற்றப்படி காரின் உட்புறம் மற்றும் என்ஜின் தேர்வுகளில் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை. தாய்லாந்து எவரெஸ்ட்டில் 2.0 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் (213 பிஎச்பி & 500 என்எம்) என்ஜினும், அதன் விலை குறைவான வேரியண்ட்களில் இதே என்ஜினின் சிங்கிள் டர்போ வெர்சனும் (170 பிஎச்பி & 420 என்எம்) வழங்கப்படுகிறது.

ஃபோர்டு எவரெஸ்ட்டிற்கான இந்த அப்டேட்கள் இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் எவரெஸ்ட் தான் தாய்லாந்தில் இருந்து சிகேடி முறையில் இந்திய சந்தையில் எண்டெவர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.29.99 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ள இதன் இந்திய வெர்சனில் மேற்கூறப்பட்ட என்ஜினின் சிங்கிள் டர்போ வெர்சன் மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் எண்டெவரின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளிலும் ஃபோர்டு நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதன் உலகளாவிய அறிமுகம் அடுத்த ஆண்டிலும் இந்திய அறிமுகம் 2022லும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.