ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் முக்கிய விபரங்கள்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் எஸ்யூவி கார்களுக்கு உரிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மாடல்தான் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல். மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் கிடைக்கும் இந்த மாடலுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

இந்த நிலையில், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் மாடல் குறித்த தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியானது. ஆனால், கொரோனா பிரச்னையால் இந்த மாடல் சந்தைக்கு வரவில்லை.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

இந்த சூழலில், தற்போது பண்டிகை காலத்தின்போது இந்த புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. அண்மையில் டீலர் யார்டு ஒன்றில் இந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது குறித்த படங்களை பகிர்ந்து கொண்டோம். இந்த நிலையில், இந்த காரின் விபரங்கள் அடங்கிய கையேடு படங்கள் மற்றும் தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறோம்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டைட்டானியம் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் இந்த காரின் வசீகரத்தை அதிகரிக்கும் விதத்திலும், தனித்துவத்தையும் வழங்குகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

கூரைக்கு கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருப்பதோடு, ரூஃப் ரெயில்கள் மற்றும் ரியர் வியூ மிரர்களுக்கு பின்புறத்தில் சிவப்பு வண்ண பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு பதிப்பு மாடலில் கருப்பு வண்ண பூச்சு கொண்ட 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சிறப்பு பதிப்பு மாடல் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

உட்புறத்தில் இருக்கைகளில் சிவப்பு வண்ண நூல் தையல்கள் காருக்கு பிரிமீயம் உணர்வை தருகிறது. அத்துடன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை சுற்றிலும் ஒரு அழகு வேலைப்பாடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி இடம்பெற்றுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசனில் புளூடூத் இணைப்பு வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிஹ் சிஸ்டம், ஃபோர்டு பாஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன்: முக்கிய விபரங்கள்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.7.39 லட்சம் விலையிலும், டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்பெஷல் எடிசன் மாடல் விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
The Ford Freestyle crossover hatchback will receive a new special edition variant called Flair in the Indian market. The company is expected to launch the new variant soon and could be available for a limited time.
Story first published: Tuesday, August 11, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X