ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பண்டிகை காலத்தையொட்டி, கவர்ச்சிகர அம்சங்களுடன் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் எஸ்யூவி அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ஸ்டைல் மாடல்தான் ஃப்ரீஸ்டைல். மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, டிசைனில் சில மாற்றங்களுடன் வந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு குறிப்பிடத்தக்க அளவு விற்பனையில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த நிலையில், கொரோனா பிடியிலிருந்து எழுந்து நிற்கவும், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் விலை உயர்ந்த டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இந்த மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் கருப்பு, சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் காரின் தோற்ற வசீகரத்தை கூட்டி காட்டுகிறது. விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள், கருப்பு வண்ண கூரை, சிவப்பு வண்ண ரியர் நியூ மிரர்கள், ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெற்றிருக்கிறது. ஃபோர்டுபாஸ் என்ற கனெக்டெட் கார் ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக காரின் எரிபொருள் அளவு, எவ்வளவு தூரம் பயணிக்கலாம், பராமரிப்பு இடைவெளி உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

தவிரவும், இந்த காரில் சேட்டிலைட் நேவிகேஷன், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 96 பிஎஸ் பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ப்ளேர் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.7.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.8.79 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டு இருப்போருக்கு மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has launched Freestyle Flair Edition in India with more features and price starting at Rs.7.69 lakh (Ex-Showroom, Delhi)
Story first published: Wednesday, August 12, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X