ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பிரத்யேக படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. அந்த படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் எஸ்யூவி அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல். வழக்கமான ஹேட்ச்பேக் கார்களிலிருந்து வேறுபட்ட இந்த க்ராஸ்ஓவர் மாடலின் செயல்திறன் மிக்க எஞ்சின், தனித்துவமான அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

இந்த நிலையில், பண்டிகை காலம் நெருங்கி வருவதையடுத்து, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு அதிக சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வருவது வழக்கம். அந்த வகையில், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ஃபோர்டு டீலர் யார்டு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஃப்ரீஸ்டைல் காரின் ஸ்பெஷர் எடிசன் படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. பல கவர்ச்சிகரமான அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டைட்டானியம் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃப்ளேர் எடிசன் வர இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிசனில் காரின் கதவுகளின் அடிப்பாகம், பின்புற கதவு உள்ளிட்டவற்றில் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

கருப்பு வண்ண கூரை, ரூஃப் ரெயில்கள், சிவப்பு வண்ண சைடு மிரர்கள் ஆகியவை அழகு சேர்க்கிறது. இந்த காரில் ஸ்கஃப் பிளேட்டுகள், கருப்பு வண்ண அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

உட்புறத்திலும் சில கூடுதல் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு வண்ண நூலில் தையல் வேலைப்பாடுகள், சிவப்பு அலங்காரத்துடன் கதவுகள், டியூவல் டோன் சீட் கவர்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், ரியர் வியூ பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஃபோர்டு பாஸ் கனெட்டெட் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பெட்ரோல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.7.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.8.49 லட்சத்திலும் கிடைக்கிறது. இதைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய ஃப்ளேர் எடிசன் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India could soon launch a new variant of the brand's Freestyle crossover hatchback. It could be available for a limited time in the market. Ahead of its launch, the Flair hatchback has been spotted arriving at dealerships.
Story first published: Saturday, August 8, 2020, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X