சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

'ரேஞ்ச் ரோவர்' கார் ஒன்றின் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் மக்களை குழப்பி வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிக்கள் சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும். இந்த பிரம்மாண்ட எஸ்யூவிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இங்கே ஒரு 'ரேஞ்ச் ரோவர்' பலரின் கவனத்தை ஈர்ப்பதுடன், பலருக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அது ஏன்? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

இது கேரளாவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஆகும். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போலவே தோற்றமளிக்க செய்ய வேண்டும் என்பதற்காக, வேறு ஒரு வாகனத்தில் ஏராளமான மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. சமூக வலை தளங்களில் இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

இந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும் உண்மையில் இது என்ன வாகனம்? என விவாதம் நடத்தி வருகின்றனர். உண்மையில் இது ஃபோர்டு ஃப்யூசன் (Ford Fusion) கார் ஆகும். இதைதான் மாடிஃபிகேஷன் பணிகள் மூலம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி போல் மாற்றம் செய்துள்ளனர். அரசு அதிகாரிகள் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன் என்பது அவ்வளவு பிரபலம் கிடையாது.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

இருந்தாலும் வாகனங்கள் மீது காதல் கொண்ட ஒரு சிலர் பெரிய அளவில் மாடிஃபிகேஷன்களை செய்து கொண்டுதான் உள்ளனர். ஒரு சிலர் மிகவும் எளிமையான தங்களின் கார்களை விலை உயர்ந்த கார்களை போல மாடிஃபிகேஷன் செய்கின்றனர். அரசு விதிக்கும் அதிகப்படியான இறக்குமதி வரிகள் மற்றும் பராமரிப்பு செலவு காரணமாக இத்தகைய கார்களை பலராலும் வாங்க முடிவதில்லை.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

எனவே அதற்கு பதிலாக தங்கள் எளிமையான கார்களை, விலை உயர்ந்த தங்களின் கனவு கார்களை போல் ஒரு சிலர் மாடிஃபிகேஷன் செய்து கொள்கின்றனர். இந்த ஃபோர்டு ஃப்யூசன் காரை பொறுத்தவரை, முன் பகுதி முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கருப்பு நிற க்ரில் அமைப்பை இந்த ஃபோர்டு ஃப்யூசன் பெற்றுள்ளது.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

அத்துடன் ஹெட்லேம்ப்களும் வித்தியாசமாக உள்ளன. அதேபோல் பின் பகுதியிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரேஞ்ச் ரோவர் லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பின் பக்க கண்ணாடி மாற்றப்பட்டுள்ளது. உண்மையான ரேஞ்ச் ரோவரில் இருப்பதை போன்றே, இந்த காரிலும் முன் மற்றும் பின் பகுதிகளில் பெரிய ரேஞ்ச் ரோவர் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

ஆனால் எளிமையான ஒரு காரை, விலை உயர்ந்த வாகனம் போல் மாடிஃபிகேஷன் செய்வது என்பது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் ஹோண்டா அக்கார்டு மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற கார்களை, லம்போர்கினி மற்றும் ஃபெராரி கார்களை போல் ஒரு சிலர் மாடிஃபிகேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலை தளங்களில் விவாதம்... மக்களை குழப்பும் 'ரேஞ்ச் ரோவர்' கார்... ஏன் தெரியுமா?

அத்துடன் டாடா நானோ போன்ற மிக மிக சாதாரண கார்களை புகாட்டி வேரோன் மாடல்களை போன்று மாடிஃபிகேஷன் செய்ததற்கான வரலாறுகளும் இந்தியாவில் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள விதிமுறைகளின்படி பார்த்தால், கார்களில் இத்தகைய மாடிஃபிகேஷன் செய்வது சட்ட விரோதமானது. காவல் துறையிடம் நீங்கள் சிக்கனால், நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

Most Read Articles
English summary
Ford Fusion Modified Into Range Rover - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X