அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் அதன் எஸ்யூவி ரக மாடலான எண்டேவியர் பிஎஸ்6-ன் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

ஃபோர்டு நிறுவனம் 2020 எண்டேவியர் எஸ்யூவி மாடலை பிஎஸ்6 அப்டேட் உடன் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை அப்போது ரூ.29.55 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது இந்த எஸ்யூவி காரின் விலையை தயாரிப்பு நிறுவனம் உயர்த்தியுள்ளது.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

இந்த விலை அதிகரிப்பு ரூ.44,000-ல் இருந்து ரூ.1.20 லட்சம் வரையில் உள்ளது. அதாவது ஃபோர்டு எண்டேவியரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான டைடானியம் 2.0 4X2 ஆட்டோமேட்டிக் ரூ.44 ஆயிரத்தை விலை உயர்வாக பெற்றுள்ளது. இதனால் இந்த எஸ்யூவி மாடல் இனி ரூ.29.99 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கும்.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

அதுவே இரண்டாவது டைட்டானியம் ப்ளஸ் 2.0 4X2 ஆட்டோமேட்டிக்கின் விலை இனி ரூ.32.75 லட்சம் மற்றும் டாப் வேரியண்ட்டான டைட்டானியம் ப்ளஸ் 2.0 4X4 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.34.45 லட்சமாகும். முழு-எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள 2020 எண்டேவியர் மாடலில் முக்கிய சிறப்பம்சமாக ப்ராண்ட்டின் ‘ஃபோர்டுபாஸ்' என்ற இணைப்பு தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

இந்த தொழிற்நுட்பமானது வாகனத்தை பற்றிய தகவல்கள் உள்பட மொத்த வாகனத்தையும் உரிமையாளர் தொலைநிலையில் கட்டுப்படுத்துவதற்கு (ரிமோட்லி கண்ட்ரோல்) அனுமதிக்கிறது. உட்புற கேபினில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடியதாக 8-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்படுகிறது.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

இதுமட்டுமின்றி பனோராமிக் சன்ரூஃப், நிலப்பரப்பு மேலான்மை அமைப்பு (டெரன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மலைத்தொடர் பாதைகளுக்கான கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட வசதிகளை 2020 ஃபோர்டு எண்டேவியர் மாடல் தன்னுள் கொண்டுள்ளது.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான புதிய 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டீசல் என்ஜின் இந்த எஸ்யூவி மாடலில் வழங்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

இந்த புதிய என்ஜின் அமைப்பை 20 சதவீதம் கூடுதலான கடை-நிலை டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் தயாரிப்பு வடிவமைத்து இந்த 2020 மாடலில் பொருத்தி வருகிறது. இந்த என்ஜின் உடன் 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை இந்திய சந்தையில் வேறெந்த மாடலும் இதுவரை கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...

இந்த ட்ரான்ஸ்மிஷன் செலக்ட்ஷிஃப்ட் வசதியையும் கொண்டுள்ளது. எண்டேவியர் உண்மையில் ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை பெற்று தரும் மாடல்களுள் ஒன்றாக உள்ளது. இதனால் இந்த விலை அதிகரிப்பு இதன் விற்பனையை பாதிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Increases The Price Of The BS6 Endeavour For The Indian Market: Details & Specifications
Story first published: Saturday, August 8, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X