Just In
- just now
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 7 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 8 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 9 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா.. 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் வைரஸால் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு!! குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...
ஃபோர்டு இந்தியா நிறுவனம் 'நள்ளிரவு ஆச்சிரியங்கள்' என்ற பெயரில் அதன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் தயாரிப்பு வாகனங்களை சந்தைப்படுத்தி வரும் நிறுவனங்களுள் ஒன்று ஃபோர்டு மோட்டார்ஸ். இந்நிறுவனம் அமல்படுத்தவுள்ள ‘நள்ளிரவு ஆச்சிரியங்கள்' என்ற திட்டம் முழுக்க முழுக்க இரவு நேரத்திலும் கார்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகும்.

ஃபோர்டின் இந்த திட்டம் இந்த டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரையில், வெறும் 3 மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த மூன்று நாட்களில் ஃபோர்டின் இந்திய டீலர்ஷிப் மையங்கள் கூடுதலாக இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு வரையில் திறந்திருக்கும்.

இரவு நேரத்தில் தங்களது விருப்பமான கார்களை ஷோரூமிற்கு சென்று முன்பதிவு செய்வதும், முன்பதிவு செய்யப்பட்ட கார்களை டெலிவிரி எடுப்பதும் புதுமையான அனுபவத்தை தரக்கூடியது. வெளிநாடுகளில் குறிப்பாக கிறித்துமஸ் மாதமான டிசம்பரில் காரை வாங்குவது அங்குள்ளவர்களுக்கு பிடித்தமான ஒன்றாகும்.

இந்த பழக்கத்தை இந்தியாவிற்கும் கொண்டுவரவே ஃபோர்டு இவ்வாறான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த மூன்று நாட்களில் வாடிக்கையாளர்கள் ஃபோர்டின் டயல்-ஏ-ஃபோர்டு சேவையையோ அல்லது நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தையோ அணுகி இரவு நேரத்திலும் காரை முன்பதிவு செய்யலாம்.

மேலும், இந்த காலகட்டத்தில் தங்கள் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கீறல் அட்டையைப் பெறுவார்கள், இதன் மூலம் வீட்டு உபகரணங்கள், எல்.இ.டி டிவி, ஏர் பியூரிஃபையர், ஸ்மார்ட்போன்கள், தங்க நாணயங்கள் மற்றும் பரிசு அட்டைகள் முதல் ரூ.25,000 வரை உறுதிப்படுத்தப்பட்ட பரிசுகளை வெல்லலாம்.

மேலும், டிசம்பர் மாதத்தில் டெலிவரி எடுக்கும் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள பம்பர் பரிசுகளும் காத்திருக்கின்றன. இந்த புதிய திட்டத்தின் மூலம், ஃபோர்டு இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு கார் வாங்கும் அனுபவத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஃபோர்டு சமீபத்தில் ‘சேவை விலை கால்குலேட்டர்' என்ற சேவையையும் துவக்கியது.

இது வாடிக்கையாளர்களுக்கு சேவை பணிமனைக்கு வருவதற்கு முன்பே தங்கள் காரின் சேவை மற்றும் பாகங்களின் விலையை அறிய அனுமதிக்கிறது. ‘நள்ளிரவு ஆச்சிரியங்கள்' திட்டத்தை ஃபோர்டு நடைமுறைக்கு கொண்டுவருவது இது முதல்முறையல்ல, ஏனெனில் கடந்த சில வருடங்களிலும் இந்நிறுவனம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

புதிய ‘நள்ளிரவு ஆச்சிரியங்கள்' திட்டம் குறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சேவை பிரிவின் நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா கருத்து தெரிவிக்கையில் "மிட்நைட் ஆச்சரியத்தை மீண்டும் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ஃபோர்டையும் பரிசு பொருட்களுடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம்.

தற்போதைய தொற்றுநோய் சூழலினால், புதிய ஃபோர்டை சொந்தமாக்குவதற்கான மனநிலையை அதிகரிக்க, டயல்-ஏ-ஃபோர்டு மூலம் கட்டணமில்லா எண் 1800-419-3000 மற்றும் வாகனத்தை முன்பதிவு செய்வதற்கான விருப்பங்களுடன் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த நாட்களின்போது வாடிக்கையாளர்கள் www.booking.india.ford.com என்ற இணையத்தளத்தை பயன்படுத்தலாம்" என தெரிவித்தார்.