தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

ஆக்டிவ் என்ற பெயரில் ஈக்கோஸ்போர்டின் புதிய வேரியண்ட்டை ஃபோர்டு நிறுவனம் யுனெடெட் கிங்டமில் (UK) அறிமுகப்படுத்தியுள்ளது. ஈக்கோஸ்போர்டின் இந்த புதிய வேரியண்ட்டை பற்றியும் இந்த வேரியண்ட் இந்தியாவிற்கு வருகை தருமா என்பதை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

ஆக்டிவ், ஈக்கோஸ்போர்டின் புதிய ஆஃப்-ரோடு வேரியண்ட்டாக அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஃபோர்டின் சப்-4மீ எஸ்யூவி காரான ஈக்கோஸ்போர்ட் ஏற்கனவே ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக விளங்கி வருகிறது.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

இருப்பினும் ஆஃப்-ரோடு பயணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட், ஈக்கோஸ்போர்ட்டின் மற்ற வேரியண்ட்களை காட்டிலும் சிறந்த அட்வென்ஜெர் பயணங்களை வழங்கும் என்பது உறுதி.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

'Active' முத்திரையுடன், சக்கரத்திற்கு மேலே வளைவுகள் மற்றும் பக்கவாட்டு ஸ்கிர்ட்கள் என இந்த புதிய வேரியண்ட்டை சுற்றிலும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தேவையான பிளாஸ்டிக் க்ளாடிங் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் காரில் சஸ்பென்ஷன் அமைப்பு சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

இது கரடு முரடான பாதைகளில் வாகனத்தின் தடையற்ற இயக்கத்திற்கு பெரிதும் உதவும். மற்றப்படி உட்புறத்திற்கு எந்த அப்கிரேடும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை. ஆக்டிவ் முத்திரைகள் தான் இருக்கை தலையணைகளில் வழங்கப்பட்டுள்ளன.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

ஃபோர்டு ஈக்கோஸ்போர்டில் வழக்கமாக வழங்கப்படும் சிங்க்3 (SYNC3), ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவற்றுடனான 8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், ஆறு காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஈக்கோஸ்போர்டிற்கு 1.0 லிட்டர் 3-சிலிண்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் (123 பிஎச்பி/ 138 பிஎச்பி) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (99 பிஎச்பி) என்ற இரு என்ஜின் தேர்வுகளை ஃபோர்டு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த இரு என்ஜின்களுடனும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

தாறுமாறான தோற்றத்தில் யுகே-வில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்!! இந்தியாவின் பக்கம் வருமா?

புதிய ஆக்டிவ் வேரியண்ட் வலது கை ட்ரைவ் மாடலான இந்திய ஈக்கோஸ்போர்டிற்கு வழங்கப்படுமா என்பது கேள்வியாகவே உள்ளது. புதிய வேரியண்டை அறிமுகப்படுத்த போவதில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் காஸ்மெட்டிக் அப்டேட்களையாவது இந்திய வெர்சனில் கொண்டுவரலாம். இதற்கான பதில் அனைத்தையும் ஃபோர்டு இந்தியா நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும்.

Most Read Articles
English summary
Re 2021 Ford EcoSport Active officially revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X