கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த வாரத்தில் புதிய தலைமுறை எஃப்-150 பிக்அப் ட்ரக்கை காட்சிப்படுத்தவுள்ளது. புதிய படுக்கை-இருக்கை மற்றும் ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்களுடன் வெளிவரவுள்ள இந்த புதிய ஃபோர்டு மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

அமெரிக்க சந்தையில் சிறப்பான விற்பனை வாகனமாக உள்ள எஃப்-150 மாடலானது வருடத்திற்கு 50 மில்லியன் டாலர்கள் வருவாயை ஃபோர்டு நிறுவனத்திற்கு ஈட்டி கொடுக்கிறது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் பாதியை இந்த மாடலே பெற்று கொடுக்கிறது.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

இதற்கிடையில் டெஸ்லா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்கிரேட்கள் மற்றும் ஹை-ஸ்பீடு இன்-வாகன டேடா நெட்வொர்க்ஸ் அப்டேட்களை தங்களது தயாரிப்புகளில் வழங்கி வருவதை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனமும் தனது எஃப்-150 ட்ரக்கில் இந்த தொழிற்நுட்பங்களை வழங்கவுள்ளது.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

இந்த வருட இறுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ட்ரக் மாடலின் உத்தரவாத தொகையை 5 மில்லியன் டாலர்கள் குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஃபோர்டு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ஜிம் ஃபார்லே கூறியுள்ளார்.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

ஏனெனில் கொரோனா வைரஸினால் இந்நிறுவனம் 20 மில்லியன் டாலர்களை கடனாக வாங்கியுள்ளது. இதனை மொத்தமாக புதிய எஃப்-150 மாடலின் மூலமாக பெற்றுவிட வேண்டும் என இந்நிறுவனம் கணித்து வைத்துள்ளது.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

அதேபோல் ஃபோர்டு நிறுவனம் இந்த புதிய ட்ரக் மாடலின் வெளிப்புற டிசைனில் மாற்றம் கொண்டு வந்து ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. இதனால் உட்புற கேபின் மட்டும் தான் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இந்த ட்ரக் மாடலை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

ஃபோர்டு நிறுவனம் புதிய எஃப்-150 மாடலை முதன்முறையாக பொது பார்வைக்கு வருகிற ஜூன் 25ல் இணையத்தின் மூலமாக கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ட்ரக் மாடலில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக விமானங்களில் முதல்-தர கேபினில் காணப்படும் படுக்கை-இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

இதனால் இந்த ட்ரக்கிலேயே வாழ்வது என்பது முடியும் காரியமாகவே இருக்கும். இதன் உட்புறத்தில் பெரிய காட்சி திரையை ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இதே போன்ற அம்சமாக 12 இன்ச்சில் பெரிய அளவிலான காட்சி திரையை ஃபியாட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என்வி நிறுவனம் தனது புதிய ராம் ட்ரக் மாடலுக்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

ராம் நம் எல்லாருக்கும் பாடம் ஒன்றை கற்பித்துள்ளதாக கூறியுள்ள கொலோம்பியா நாட்டிற்கான ரிக்கார்ட் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் ரெட் ரிக்கார்ட், 5-இன்ச் திரைகள் அனைத்தும் தற்போது 10, 12, 15 இன்ச் திரைகளாக மாறிவிட்டன. இதனை முதலில் ஆரம்பித்து வைத்தது டெஸ்லா தான் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

எஃப்-150-ன் புதிய எலக்ட்ரிக்கல் கட்டமைப்பால், வாகனத்தை முக்கிய தொகுதிகள் கட்டுப்படுத்தும் வகையில் ஃபோர்டு நிறுவனம் விரைவில் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை வழங்கவுள்ளது. அதேபோல் இந்த ட்ரக்கில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு வசதிகள் மாடலின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஃபோர்டு நிறுவனம் வாகனத்திற்கான உத்தரவாத தொகையையும் குறைக்க உதவும் என ஜிம் ஃபார்லே கூறியுள்ளார்.

கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அதிரடி திட்டத்தை வகுத்துள்ள ஃபோர்டு...

எஃப்-சீரிஸ் ட்ரக் மாடலை ஃபோர்டு நிறுவனம் முதன்முதலாக கடந்த 1948ல் அறிமுகப்படுத்தியது. எஃப்-150 ட்ரக் ஆனது 1975ல் அறிமுகமானது. இத்தனை வருடங்கள் ஆனாலும் தற்போதைய தலைமுறை எஃப்-150 மாடல் விற்பனையில் வலுவானதாகவே திகழ்கிறது. இதனால் இதன் புதிய வெர்சன் ஃபோர்டு நிறுவனத்தின் சரிவை தடுக்கும் அல்லது முன்னேற்றத்தை காண செய்யலாம்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford's Redesigned F-150 Pickup Will Offer Greater Connectivity, Sleeper Seat
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X