ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

பிரபலமான ஃபோர்டு மஸ்டங் கார் தனது 56வது பிறந்தநாளை நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) கொண்டாடியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக சிறப்பாக விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என்ற விருதை பெற்றுள்ள ஃபோர்டு மஸ்டங் காரின் வரலாற்றை சுருக்கமாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

சிறப்பாக விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என்ற விருதை பெற்றதில் இருந்து இந்த கார் தான் பெரும்பாலானோர் விரும்பும் ஸ்போர்ட்ஸ்-கூபே கார் என்பதை நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. மஸ்டங் காருக்கு இந்த விருது சரியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் ஆறாவது தலைமுறை கார் உலகளவில் அறிமுகமான போது வெளியானது கூடுதல் சிறப்பாக பார்க்கப்பட்டது.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

அறிமுகத்தில் இருந்து ஃபோர்டு மஸ்டங் மாடலின் ஆறாவது தலைமுறை காரின் 6,33,000 பிரதிகள் இதுவரை 146 நாடுகளில் விற்பனையாகி உள்ளன. குறிப்பாக இந்த காருக்கு அமெரிக்காவில் கடந்த 50 வருடங்களாக மிக பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

நாங்கள் மஸ்டங் மாடல் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருவதை நினைத்து பெருமையடைகிறோம் என்று ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லே கூறியுள்ளார். உண்மையான அமெரிக்கன் ஸ்டைல் இந்த காரில் பொதிந்துள்ளதால் மஸ்டங் மாடலை இயக்குவதற்கு எந்த கார் பிரியருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

மேலும் ஜிம் ஃபார்லே கூறுகையில், எங்களது மஸ்டங் கார் வாடிக்கையாளர்களை கடந்த 56 ஆண்டுகளாக சரியாக கவனித்து வருகிறோம் என்று நினைக்கில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த கார் 102,090 பிரதிகள் விற்பனையை பதிவு செய்துள்ளதாக லண்டனில் அமைந்துள்ள உலகளாவிய தகவல் வழங்கும் அமைப்பான ஐஎச்எஸ் மார்க்கிட் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

இந்த பிரதிகள் விற்பனை எண்ணிக்கையே இந்த மஸ்டங் மாடலை சிறப்பாக விற்பனையான மாடலாக கடந்த ஆண்டில் முன்னுறுத்தியுள்ளது. மேலும் ஐஎச்எஸ் மார்க்கிட், மஸ்டங் மாடல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த பட்டத்தை பெறுவதாகவும் கூறியுள்ளது. மேற்கூறப்பட்ட இந்த காரின் உலகளாவிய விற்பனை எண்ணிக்கையில் ஐரோப்பா நாடுகள் மட்டுமே 9,900 பிரதி விற்பனையை கொண்டுள்ளன.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

கடந்த ஆண்டில் மஸ்டங்கின் விற்பனை ஐரோப்பாவில் 2018ஆம் ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க மிச்சிகன் நகரின் ஃப்ளாட் ராக் பகுதியில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் தற்போதைய தலைமுறை மஸ்டங் மாடலில் 445 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 5-லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

இந்த என்ஜின் உடன் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் தேர்வும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

லெஜண்ட் மஸ்டங் ஜிடி ஃபாஸ்ட்பேக், 1968ல் பிரபல அமெரிக்க நடிகர் ஸ்டீவ் மெக்வீன் உடன் இணைந்து வார்னர் ப்ரோஸ் தயாரிப்பில் புல்லிட் என்ற படத்தில் நடித்திருந்தது. இதில் மஸ்டங் காரின் பெயரும் புல்லிட். இதில் மஸ்டங் காரின் தோற்றம் புதுமையாக இருந்ததால் இன்றளவும் இதன் புல்லிட் லிமிடேட் எடிசனிற்கு உலகளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
The Ford Mustang Turns 56; Is The Worlds Best Selling Sports Car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X