பிரபலமான புமா பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு... அறிமுகம் எப்போது?

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, விரைவில் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் அறிமுகப்படுத்தவுள்ள புமா எஸ்டி மாடலின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஃபோர்டின் இந்த புதிய காரை பற்றி வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த டீசர் வீடியோ புதிய புமா எஸ்டி மாடல் 5-இருக்கை க்ராஸ்ஓவர் தோற்றத்தில் சில டிசைன் மற்றும் உட்புற மாற்றங்களுடன் ஆற்றல்மிக்க என்ஜின் அமைப்பையும் இயந்திர பாகங்களையும் பெற்றுள்ளதை சுட்டி காட்டுகிறது. ஃபோர்டின் இந்த புதிய க்ராஸ்ஓவர் கார் ஏற்கனவே ஐரோப்பாவில் சில சோதனை ஓட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

பிரபலமான புமா பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு... அறிமுகம் எப்போது?

இதன் சோதனை ஓட்ட மாடலில் ரீ-டிசைனில் ஏர் இண்டேக்குகளுடன் முன்புற பகுதி அப்கிரேட் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் காரின் மூக்கு வடிவிலான பகுதிக்கு அடியில் புதிய ஸ்ப்ளிட்டர் க்ரே நிறத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஹெட்லேம்ப்கள் ஸ்மோக்டு தோற்றத்தில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி விளக்குகளுடன் இருந்தன.

பிரபலமான புமா பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு... அறிமுகம் எப்போது?

சக்கர ஆர்ச்சின் அளவு அதிகரிக்கப்பட்டு V-வடிவிலான புதிய அலாய் சக்கரங்களுடன் காணப்பட்டன. இத்தகைய அப்டேட்கள் தான் புதிய புமா எஸ்டி க்ராஸ்ஓவர் மாடலுக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன. இவற்றுடன் காரின் வெளிப்புறத்தில் வேறு சில அப்டேட்களும் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் துணை க்ளாடிங் மாற்றங்கள், மேற்கூரையில் பெரிய அளவில் ஸ்பாய்லர், திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் பின்புற பம்பர் மற்றும் வட்ட வடிவிலான எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவை அடங்கும். உட்புறத்தில் ரெகாரோ-மோடில் ஸ்போர்ட் இருக்கைகள், பல கட்டுப்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரத்தின் மீது எஸ்டி லோகோ உள்ளிட்டவை பார்த்தவுடன் கவரும் அம்சங்களாக உள்ளன.

பிரபலமான புமா பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு... அறிமுகம் எப்போது?

இவை மட்டுமின்றி, உட்புற கேபின் கருப்பு நிறத்தில் இணைப்பு வசதிகளை கொண்ட ஃப்லோடிங் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலுக்கு அடியில் ஏசி கண்ட்ரோல்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. மெக்கனிக்கல் பாகங்கள் பெரிய ப்ரேக்குக்கள் மற்றும் சிறப்பான ஹேண்டிலிங் மூலமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்க தற்போதைய புமா மாடலில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் மில்டு-ஹைப்ரீட் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 153 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது புதியதாக சேர்க்கப்பட்டுள்ள எஸ்டி என்கிற பேட்ஜ் கூடுதல் வேகத்திற்காக காரில் ஓட்டுனருக்கு உதவிகரமான சில பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

பிரபலமான புமா பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு... அறிமுகம் எப்போது?

இதனால் பிரபலமான ஃபியஸ்டா எஸ்டி மாடலின் பெரிய அளவிலான 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-போட் என்ஜினை புதிய புமா எஸ்டி மாடல் பெறவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 198 பிஎச்பி பவரையும், 290 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவல்லது.

இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக முன் சக்கரங்களை மட்டும் தான் இயக்க முடியும். இந்த எஸ்டி வெர்சன் கார் 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 7 வினாடிகளில் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலமான புமா பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு... அறிமுகம் எப்போது?

அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, புமா என்ற பெயர்பலகையை 1997-ல் இருந்து 2001 வரை விற்பனை செய்த காம்பெக்ட் ஸ்போர்ட்ஸ் கூபே மாடல் ஒன்றிற்கும் சூட்டி வந்தது. பிரபலமான பெயர்பலகையாக விளங்கிய இது தற்போது அப்படியே எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரசிகர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
200 HP Ford Puma ST Performance Crossover Teased; Launch This Year
Story first published: Tuesday, May 5, 2020, 23:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X