Just In
- 32 min ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 12 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 13 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Sports
எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் "வாஷிங்க்டன்".. சூறாவளி சுந்தர்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- News
டிரம்பின் புதிய சாதனை.. பதவியை முடிக்கும் காலத்தில்...அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் டிரம்ப்!
- Movies
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோயம்புத்தூரில் காட்சியளித்த ஃபோர்டு ரேஞ்சர் பிக்அப் ட்ரக்!! அமெரிக்கர்களுக்கு பிடித்த வாகனமாம்...
ஃபோர்டு ரேஞ்சர் பிக்அப் ட்ரக் இந்திய சாலையில் மீண்டும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு ரேஞ்சர் 1983ல் அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகமானது. சிறிய ரக பிக்அப் ட்ரக்-ஆன ரேஞ்சர் ஃபோர்டின் லைன்-அப்பில் எஃப்-150க்கு கீழே நிலைநிறுத்தப்படுகிறது.

கோயம்புத்தூரில் மோட்டார்பீம் செய்திதளத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள சோதனை மாதிரி, ஃபோர்டு ரேஞ்சரின் விலை குறைவான வேரியண்ட் போல் காட்சியளிக்கிறது. இந்த வேரியண்ட் மூன்றாம் தலைமுறை ரேஞ்சரின் குழு கேப் அல்லது இரட்டை கேப் (4-கதவு) வெர்சனாக இருக்கலாம்.

ரேஞ்சர் உலகளவில் ஃபோர்டு எவரெஸ்ட்டின் பிக்அப் ட்ரக் வெர்சனாக பார்க்கப்படுகிறது. எவரெஸ்ட் தான் இந்தியாவில் எண்டேவர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனையின் போது கண்டறியப்படுவது இது முதல்முறை அல்ல.

தற்போதைய சோதனை ரேஞ்சர் வாகனம் சிவப்பு நிற நம்பர் ப்ளேட் உடன் காட்சியளிக்கிறது. இதனால் இந்த வாகனம் நேரடியாக தொழிற்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். அதேநேரம் ப்ளாட்ஃபாரத்தை சோதனை செய்யவும் ரேஞ்சரை இவ்வாறான சோதனைகளில் ஃபோர்டு ஈடுப்படுத்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பும் ஃபோர்டு மோட்டார் நிறுவனமும் அவற்றின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்காக கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் ஃபோர்டு விஎக்ஸ்-772 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படவுள்ளன.

மஹிந்திரா தனது பங்கிற்கு அவற்றில் எம்ஸ்டாலியோன் வரிசை டர்போ பெட்ரோல் என்ஜின்களை பொருத்தப்படவுள்ளது. எம்ஸ்டாலியோன் வரிசையில் 1.2 லிட்டர் டிஜிடிஐ, 1.5 லிட்டர் டிஜிடிஐ மற்றும் 2.0 லிட்டர் டிஜிடிஐ போன்ற வெவ்வேறான யூனிட்கள் அடங்குகின்றன.

இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் எடிசனின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் டிஜிடிஐ யூனிட் சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை மஹிந்திரா தாரில் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஃபோர்டின் சி-எஸ்யூவி மற்றும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்களில் கொண்டுவரப்படவுள்ளது.