ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

ஃபோர்டு ரேஞ்சர் ராப்டார் மாடலின் லிமிடேட் எடிசன் ராப்டார் தண்டர் என்ற பெயரில் வெறும் 4,500 யூனிட்களில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருகிற செப்டம்பர் மாதம் முதல் டெலிவிரியை துவங்கவுள்ள ஃபோர்டின் இந்த ஸ்பெஷல் எடிசனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

ஃபோர்டு நிறுவனம் பிக்அப் ட்ரக் மாடல்களுக்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டு சந்தைகளில் கிடைத்துவரும் அமோக வரவேற்பை பயன்படுத்தி கொள்ளும் விதமாக புதிய ட்ரக் மாடல்களை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

மேலும் இதன் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்கள் சமீபத்திய காலங்களில் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுள்ளன. இதனால் தான் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்காக இந்நிறுவனத்தின் எஸ்யூவி பிக்அப் ட்ரக் மாடலான ரேஞ்சர் ராப்டாரின் ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

ஃபோர்டு ராப்டார் தண்டர் எடிசனின் விலை அங்கு 32,965 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 27.3 லட்சமாகும். இதற்கான முன்பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வெளிப்புற மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களுடன் இரு வாகனங்களை இணைத்தாற் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

இதன் வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டியான தண்டர் பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேஞ்சர் மாடலின் சாயல் டெயில்கேட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள மேட் ப்ளாக் நிறம் மற்றும் மற்ற உடற்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடலின் க்ரே நிறங்களினால் உள்ளது.

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

வழக்கமான ரேஞ்சர் ராப்டர் மாடலில் இருந்து கூடுதலாக வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற ரேடியேட்டர் முன்புற க்ரில், 18-இன்ச்சில் கருப்பு அலாய் சக்கரங்கள், கருமையான ஸ்போர்ட்ஸ் ஹூப் மற்றும் ஃபாக் விளக்கை சுற்றிலும், கதவுகளின் ஹேண்டில்கள், ஸ்கிட் தட்டுக்கள் மற்றும் பின்புற பம்பர் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள எபோனி கருப்பு நிறம் போன்றவற்றால் இந்த ஸ்பெஷல் எடிசன் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளது.

MOST READ: வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

மற்ற கவனிக்கத்தக்க அம்சங்களாக டார்க்கான நிறத்தில் பார்டர்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் மற்றும் டார்க் டெயில் விளக்குகள் உள்ளன. இவற்றுடன் இந்த எஸ்யூவி மாடல் மொண்டைன் டாப் பவுடர் பூசப்பட்ட ரோலர் ஷட்டரை கொண்டுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

வழக்கமான ரேஞ்சர் மாடலில் இருந்து வேறுப்பாட்டுடன் தெரிவதற்காக வெளிப்புற மற்றும் உட்புறத்தில் தனித்துவமான கூறுகளை இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றுள்ளது. இந்த வகையில் இதன் கேபின் முழு எபோனி லெதர் இருக்கைகள், பளிச்சிடும் தண்டர் எம்பிராய்டரி, சிவப்பு நிற தையல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இருக்கைகளை கொண்டுள்ளது.

MOST READ: ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

ஜன்னல் தகடுகள் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டும், ஃப்ளோர் மேட்கள் கருப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜின் அமைப்புகளில் இந்த ஸ்பெஷல் எடிசன் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. இதனால் வழக்கமான 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ பை-டர்போ 4-சிலிண்டர் டீசல் என்ஜினை தான் இந்த கார் பெற்றுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 213 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷனுக்கு இந்த என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆற்றலை காரின் இரு அச்சுகளுக்கும் வழங்குகிறது.

MOST READ: பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

ஐரோப்பிய மக்களுக்காக ஸ்பெஷலாக ஃபோர்டு உருவாக்கியுள்ள ராப்டார் தண்டர் ஸ்பெஷல் எடிசன்...

ராப்டார் எஸ்யூவி மாடலுக்கு எந்தளவில் அமெரிக்காவில் வரவேற்பு உள்ளது என்றால், ஃபோர்டு நிறுவனம் கடந்த நிதியாண்டில் சுமார் 52,000 ராப்டார் மாடல்களை அங்கு விற்பனை செய்துள்ளது. இதனால் ராப்டார் மாடலின் சந்தையை புதிய லிமிடேட் எடிசன் மூலமாக விரிவுப்படுத்த இந்நிறுவனம் முன் வந்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசனின் டெலிவிரி பணிகள் இந்த வருட இறுதியில் இருந்து துவங்கவுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Ranger Thunder Special Edition Unveiled; Limited To 4,500 Units
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X