முன்னாள் ஃபார்முலா- 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

ஃபார்முலா-1 பந்தய உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக புகழப்பெறும் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார். அவருக்கு வயது 90.

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

இங்கிலாந்தை சேர்ந்த சர் ஸ்டிர்லிங் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு ஒரு பக்கமும், நோயின் தீவிரம் காரணமாக சிகிச்சைகள் போதிய பலனளிக்காத நிலையில் அவர் நேற்று காலமானார்.

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

சர் ஸ்டிர்லிங் ஒருமுறை கூட ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஆனால், ஃபார்முலா 1 பந்தய உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இன்றளவும் போற்றப்படுகிறார். இவர் நான்கு முறை இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தினார்.

MOST READ: "மக்கள்தான் முக்கியம் - பேருந்துகளை மருத்துவமனையாக மாற்றுங்கள்".. மாநில அரசு அதிரடி..

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

1962ம் ஆண்டு இங்கிலாந்தின் குட்வுட்ஸ் ஃபார்முலா 1 போட்டியின்போது அவரது கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்தார். ஒரு மாதம் கோமாவில் இருந்து பின்னர் 6 மாதங்கள் வாத நோயால் அவதிப்பட்டார். இதனால், அவர் மோட்டார் பந்தயத்திலிருந்து வெளியேற நேரிட்டது.

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

எனினும், 1980களில் மீண்டும் மோட்டார் பந்தய கள பார்வையாளர் உள்ளிட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஃபார்முலா 1 பந்தயத்தில் வாக்ஸ்ஹால், மஸேரட்டி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பாக பங்கேற்றுள்ளார்.

MOST READ: 1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

ஃபார்முலா 1 போட்டிகள் துவங்கிய முதல் தசாப்தத்தில் மிகவும் பிரபலமான வீரராக இருந்த மேனுவல் ஃபான்ஜியோவுடன் இணைந்து மெர்சிடிஸ் அணி சார்பில் பங்கேற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

தனது 10 ஆண்டுகால ஃபார்முலா 1 பந்தய கள வரலாற்றில் 16 முறை வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், ஃபார்முலா 1 தவிர்த்து பிற வகையான மோட்டார் பந்தயங்களிலும் பங்கேற்று அசத்தி இருக்கிறார்.

MOST READ: "ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண முடியலையாம்".. 12 சாலையோர கார்களை வந்த வேகத்தில் அடித்து தூக்கிய பிரபலம்...

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

1948 முதல் 1962 வரையிலான தனது 14 ஆண்டு காலக்கட்டத்தில் 529 மோட்டார் பந்தயங்களில் பங்கு கொண்டு 212ல் வெற்றி பெற்றிருக்கிறார். இத்தாலியின் பொது சாலையில் நடத்தப்படும் பிரபலமான 1000 மைல் பந்தயத்திலும் அதிவேகத்தில் கடந்து புதிய சாதனைக்கு சொந்தக்காரானார்.

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

சர் ஸ்டிர்லிங் மறைவிற்கு ஃபார்முலா 1 பந்தய உலகை சேர்ந்த அணிகளும், மோட்டார் பந்தய வீரர்களும் புகழாராம் சூட்டியுள்ளன. மோட்டார் பந்தய உலகம் முக்கிய அடையாளத்தை இழந்துவிட்டது. எங்களது மெர்சிடிஸ் ஃபார்முலா 1 அணி குடும்பத்தினர் சிறந்த நண்பரை இழந்து விட்டோம்," என்று மெர்சிடிஸ்- ஏஎம்ஜி ஃபார்முலா 1 அணி சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

MOST READ: மாருதி 800... முதல் காரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

ஸ்குடேரியா ஃபெராரி அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், சர் ஸ்டிர்லிங்கிற்கு ஆழ்ந்த இரங்கல். அவர் சிறந்த மனிதர். எங்களுக்கு சிறந்த எதிர் போட்டியாளராக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம், என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்!

ஆறு முறை சாம்பியன் பட்டம் வெற்ற ஃபார்முலா 1 வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," எங்களுக்குள் இருந்த வயது வித்தியாசத்தை தாண்டிய ஆழமான நட்பு இருந்தது. இன்று உண்மையான நண்பரிடம் இருந்து விடைபெறுகிறோம். அவருடனான உரையாடல்கள், தருணங்களை நினைவு கூர்கிறேன்," என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, ஜென்சன் பட்டனும் இரங்கல் தெரிவித்து, அவருடைய ஆழமான அறிவுரைகளை நினைவு கூர்ந்துள்ளார்.

Most Read Articles

English summary
British Formula 1 legend Sir Stirling Moss has passed away at the age of 90 following a long battle with an illness.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X