இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனம் நான்காம் தலைமுறை ஃபாபியாவை அடுத்த ஆண்டு துவக்கத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஹேட்ச்பேக் கார் இந்தியாவிற்கு வருகை தருமா என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான பிறகு தயாரிப்பு நிறுவனத்தால் அப்கிரேட் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்கோடா ஃபாபியா முதலாவதாக ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

ஏனெனில் ஐரோப்பிய சந்தைக்காக தான் முக்கியமாக இந்த ஹேட்ச்பேக் கார் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை போலோ உடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள புதிய ஃபாபியா 48வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படலாம்.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இந்த மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டமும் சர்வதேச சந்தைகளில் ஆக்டேவியாவில் வழங்கப்படும் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்திற்கு கிட்டத்தட்ட ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா ஆக்டேவியாவில் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் 1.0 லிட்டர் டிடிஐ எவோ இ-டெக் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ இ-டெக் என்ற என்ஜின் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இவற்றில் 1.0 லிட்டர் என்ஜின் 110 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் என்ஜின் 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக உள்ளன. நான்காம் தலைமுறை ஃபாபியாவில் 1.0 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் யூனிட் வழங்கப்படலாம்.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

ஆனால் அதன் 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பை முழுவதுமாக பயன்படுத்தும் விதமாக வேறுப்பட்ட ட்யூனில் இந்த மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் இந்த மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எவோ பெட்ரோல், பெரிய 1.5 லிட்டர் எவோ பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டிடிஐ டீசல் உள்ளிட்ட வழக்கமான எரிபொருள் தேர்வுகளிலும் இந்த புதிய தலைமுறை கார் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

ஸ்கோடாவின் எம்க்யூபி ஏ0 இன் இயங்குத்தளத்தால் புதிய ஃபாபியா வடிவமைக்கப்பட்டுள்ளதால், மற்ற புதிய அறிமுகங்களை போல் இதன் வெளிப்புற தோற்றமும் தற்சமயம் சில நாடுகளில் விற்பனையில் உள்ள ஃபாபியாவை காட்டிலும் பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இந்திய சந்தையை பொறுத்தவரையில் ஸ்கோடா நிறுவனம் அதன் 2.0 திட்டத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த திட்டத்தில் ஏகப்பட்ட புதிய தயாரிப்பு கார்கள் இந்த இரு நிறுவனங்களிலும் இருந்தும் வெளிவரவுள்ளன.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இதில் முதல் பகுதியாக ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட்டும், ஐந்து-இருக்கை ஃபோக்ஸ்வேகன் டைகுன் கான்செப்ட்டும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மாடல்களுக்கு மாற்று வாகனங்கள் 2022ல் அறிமுகமாகலாம்.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இவற்றுடன் சப்-4 மீட்டர் எஸ்யூவி ஒன்றையும் இந்திய சந்தைக்காக ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனால் விரைவில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு செல்லவுள்ள புதிய ஃபாபியா இந்தியாவிற்கு வருகை தருமா என்பது குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு வெளிவரவில்லை.

இந்திய சந்தைக்கு வருமா ஸ்கோடா ஃபாபியா ஹேட்ச்பேக்...? புதிய தலைமுறை கார் 2021ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பெரிய அளவில் காலியிடம் உள்ளதால் மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக ஃபாபியாவை ஸ்கோடா நிறுவனம் கொண்டுவரலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Next-Gen Skoda Fabia Could Be Considered For India
Story first published: Monday, October 5, 2020, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X