ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

ஹூண்டாய் வெர்னா மாடலின் அனைத்து வேரியண்ட்களின் எரிபொருள் திறன் ஆனது என்ஜின் லைன்-அப்பை பொறுத்து வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் எஸ், எஸ்+, எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்(ஒ) மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) டர்போ என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தி வருகிறது. இவற்றின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.9.30 லட்சத்தில் இருந்து ரூ.13.99 லட்சம் வரையில் உள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

இவற்றில் பொருத்தப்பட்டு வருகின்ற 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் 17.7 kmpl என்ற மைலேஜ்ஜையும், சிவிடி கியர்பாக்ஸ் உடன் 18.45 kmpl மைலேஜ்ஜையும் வழங்குகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

அதுவே 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினானது 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனின் உதவியுடன் 19.2 kmpl மைலேஜ்ஜை வழங்குகிறது. இவற்றுடன் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் தேர்வும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

இந்த டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 21.3 kmpl மைலேஜ்ஜையும், மேனுவல் கியர்பாக்ஸில் 25 kmpl மைலேஜ்ஜையும் வழங்குகிறது. இவற்றில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

மற்ற இரு என்ஜின் தேர்வுகளான 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் முறையே 120 பிஎச்பி/170 என்எம் டார்க் திறன் மற்றும் 115 பிஎச்பி/250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகின்றன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில், வெளிப்புறத்தில் வெர்னா மாடல் பெரிய அளவிலான க்ரில், நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள், அப்டேட்டான எல்இடி டெயில்லேம்ப்கள், பம்பர்கள் மற்றும் பூட் லிட்டை கொண்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஹூண்டாயின் ‘ப்ளூலிங்க்' தொழிற்நுட்பத்துடன் பெரிய அளவிலான தொடுத்திரை இன்டெயின்மெண்ட் சிஸ்டம், காற்றோட்டமான இருக்கை அமைப்பு, வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

இவை மட்டுமின்றி சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரீ, ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாட்டிற்கு புஷ்-பொத்தான் உள்பட சில பாதுகாப்பு அம்சங்களையும் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஹீண்டாய் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த என்ஜின் உடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்... முழு விபரம் இதோ

இந்நிறுவனம் இந்த காருக்கு உமிழப்படும் நெருப்பின் சிவப்பு, டைட்டான் க்ரே, ஸ்டாரி நைட், டைபூன் சில்வர், போலார் ஒயிட் மற்றும் பாண்டம் பிளாக் என்ற ஆறு விதமான நிறத்தேர்வுகளை வழங்குகிறது. மேற்கூறப்பட்ட மைலேஜ் அளவுகளின்படி பார்த்தால் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை பெட்ரோல் என்ஜின் உடன் வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

Most Read Articles

English summary
fuel efficiency figures of all the variants of the Verna across its engine line-up.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X