ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

ஜெனரல் மோட்டார்ஸ் நிருவனம் அதன் இரு புதிய ஹம்மர் மாடல்களின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

முந்தைய தயாரிப்புகள் போல் அல்லாமல் ஹம்மர் மாடல் அதன் எலக்ட்ரிக் அப்படியே தோற்றத்தை பெற்றுள்ளது. இந்த புதிய மாடல் தயாரிப்பு நிறுவனத்தின் பிடி1 ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

இவற்றின் அறிமுகங்கள் குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் எந்த தேதியும் குறிப்பாக அறிவிக்காவிடினும், இந்த ஹம்மர் எலக்ட்ரிக் பிக்அப் மற்றும் எஸ்யூவி மாடல்கள் இந்த வருடத்தின் இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகலாம்.

இந்த இரு மாடல்களின் தோற்றம் குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் எஸ்யூவி மாடல் கூடுதலான டயர் உடனும், பிக்அப் ட்ரக் ஆனது ஸ்போர்ட் திறனை கொண்ட ட்ரக் போன்றும் காட்சியளிக்கின்றன. இந்த இரு தயாரிப்புகளும் 1,014 குதிரைகளின் ஆற்றலை பெற்று வரவுள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

அதேபோல் இவற்றின் மூலமாக 5,216 கிலோ வரையிலான எடை கொண்ட வாகனத்தையும் இழுக்க முடியும். 0-வில் இருந்து 96kmph என்ற வேகத்தை அடைய வெறும் 3 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் இவை இரண்டிலும் லித்தியம் பேட்டரிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

இந்த இரு ஹம்மர் மாடல்களில் மேற்கூரை மட்டுமில்லாமல் உடற் அமைப்பில் உள்ள சில பேனல்களையும் தேவைக்கு ஏற்றாற்போல் நகர்த்த முடியும். இவற்றுடன் குறை-தன்னாட்சி ட்ரைவிங் சிஸ்டம் சூப்பர் க்ரூஸையும் பெற்றுள்ள இவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய சூப்பர்ஃபாஸ்ட் ஃபாஸ்ட் ரீசார்ஜ் கொடுக்கப்படவுள்ளது.

ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

இவை மட்டுமின்றி அல்ட்ரா விஷன் கேமிராக்களையும் இந்த எலக்ட்ரிக் கார்கள் பெறவுள்ளன. இந்த வருட இறுதியில் இந்த புதிய ஹம்மர் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தினாலும், விற்பனைக்கு இவை அடுத்த ஆண்டில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...

ஹம்மர் எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் பிக்அப் ட்ரக் மாடல்கள் குறிப்பாக ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜீப் வ்ராங்க்லர் மற்றும் ஃபோர்டு ப்ரான்கோ மாடல்களுக்கு போட்டியாக கொண்டுவரப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொழிற்சாலையில் இவற்றின் தயாரிப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
General Motors teases upcoming Hummer electric SUV ahead of launch this year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X