தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

அடுத்த 2021 ஆம் ஆண்டிற்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் லக்சரி கார் விற்பனை பிரிவான ஜெனிசிஸ் அதன் தனித்துவமான ஜி90 மாடலை அப்டேட் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வகையில் வெளிவரவுள்ள இதன் ஸ்டார்டஸ்ட் லிமிடேட் எடிசன் காரைப் பற்றிய முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

முற்றிலும் தென்கொரிய நாட்டு சந்தைக்காக வெளிவரவுள்ள இந்த ஸ்பெஷல் எடிஷன் வெறும் 50 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இது வழக்கமான ஜி90 மாடலை காட்டிலும் பல வேறுபாடுகளை ஏற்றுள்ளது. இந்த வகையில் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்புடன் மேற்புறத்தில் நேர்த்தியான கார்பன் மெட்டல் ஸ்பார்க்லிங் நிறமும், கீழ்புறத்தில் விக் ப்ளாக் நிறமும் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜெனிசிஸ் ப்ராண்ட் தெரிவித்துள்ளது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

ஒரு காருக்கான பெயிண்ட் அமைப்பு பணிகளே பல மணி நேரங்கள் நடைபெறுவதால் தான் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் குறைவான யூனிட்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய மாடலை காட்டிலும் இந்த ஸ்பெஷல் லிமிடேட் எடிசன் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

உட்புறத்தில் ஜெனிசிஸ் ஜி90 ஸ்டார்டஸ்ட் எடிசன் கார் சில பைஸ்போக் பாகங்களை கொண்டுள்ளது. இதில் கருமை நிறத்தில் ஹெட்லைனர், இரட்டை நிறத்தில் லெதர் இருக்கைகள், மெட்டாலிக் போர் ஆஷ் வுட்டன் ட்ரிம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

இவை தவிர்த்து புதிய டிசைனில் 19 இன்ச் சக்கரங்கள், இண்டலிஜெண்ட் ஹெட்லேம்ப்கள், ரிவர்ஸ் பார்க்கிங் போது மோதலை தவிர்க்க உதவும் வசதி, அடாப்டிவ் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களையும் ஹூண்டாய் நிறுவனம் இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் வழங்கியுள்ளது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

இதில் அடாப்டிவ் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் ஆனது காரின் அதிர்வுகளை குறைப்பது மட்டுமில்லாமல் ரைடிங்கின் சவுகரியம் மற்றும் ஸ்டேரிங் நிலைப்பாடு உள்ளிட்டவற்றையும் மேம்படுத்தும். அதுவே ரிவர்ஸ் பார்க்கிங் போது மோதலை தவிர்க்க உதவும் வசதி குறைவான வேகத்தில் கார் பின்புறமாக எதாவது ஒரு பொருளோடு மோத நேர்த்தால் தடுப்பதுடன் தேவைப்பட்டால் தன்னிச்சையாக ப்ரேக்குகளையும் செயல்படுத்திவிடும்.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

2021 ஜெனிசிஸ் ஜி90 மாடல் தென்கொரியாவில் இன்று (ஜூலை 2) முதல் விற்பனையை துவங்கவுள்ளது. இதன் ஆரம்ப விலை அங்கு 79 மில்லியன் வுன் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.49.72 லட்சமாகும்.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க

இதன் டாப் வேரியண்ட்டான நீண்ட வீல்பேஸை கொண்ட லிமோ-விற்கும் மேலே ஜி90 மாடலின் ஸ்டார்டஸ்ட் வெர்சன் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் விலை 133.5 மில்லியன் வுன் ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.03 லட்சமாகும்.

Most Read Articles
English summary
Hyundai’s Genesis G90 Luxury Sedan Gets Stardust Special Edition For 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X