அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

ஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய தகவல்களை சர்வதேச அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ளது. ஜெனிசிஸின் இந்த புதிய செடான் ரக காரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

கொரிய நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாயின் ஜெனிசிஸ் இந்த ஜி80 லக்சரி செடான் காரில், புதிய ஜிவி80 எஸ்யூவி காரில் வழங்கியிருந்த பெரும்பான்மையான ஸ்டைலிங் பாகங்களை தான் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பொருத்தியுள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

இந்த வகையில் ஜெனிசிஸின் இந்த இரு தயாரிப்பு கார்களும் ஒரே பிளவுப்பட்ட லைட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ளன. ஹெல்ட்லைட்கள் எல்இடி தரத்திலான பல்புகளுடன் உட்புற எட்ஜிற்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட்கள் இண்டிகேட்டர்களாகவும் செயல்படவுள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

டெயில்லைட்களும் இதேபோல் உட்புற எட்ஜிற்கு இணையாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இண்டிகேட்டர்கள் சற்று தடிமனான ஸ்ட்ரிப்களை கொண்டுள்ளன. ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த பின்புற இண்டிகேட்டர்கள் காரின் வெளிப்புற நிற பேனலால் பிரிக்கப்பட்டு இணையான எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டுள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

இந்த செடான் காரில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மேற்கூரை பின்புற கதவுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் உள்ள பெல்ட் லைன் காரின் இயக்கத்திற்கு இணையாக பக்கவாட்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் விண்டோ ஃப்ரேம்கள், தாழ்வான கதவு பேனல்கள், ஃபெண்டர்ஸ் வெண்ட்ஸ் மற்றும் பின்புற பம்பர் உள்ளிட்டவை க்ரோம்கள் அழகான வடிவில் இந்த காரில் உள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

இவை தவிர்த்து புதிய ஜி80 மாடலின் பின்புறத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். உட்புறத்தில் ஜெனிசிஸின் இந்த புதிய செடான் காரானது ஜிவி80 எஸ்யூவி கொண்டிருந்த பெரும்பான்மையான தொழிற்நுட்ப வசதிகளை தான் அப்படியே பெற்றுள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

இதன்படி இதன் கேபினில், ட்யூல்-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்புறத்தில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டேஸ்போர்டின் மீது 14.5 இன்ச் இன்போடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். மைய கன்சோலில் கியர் தேர்ந்தெடுப்பானை வட்ட வடிவில் பொருத்தியுள்ள ஜெனிசிஸ் நிறுவனம் கேபினை மரப்பலகை மற்றும் பளிச்சிடும் லெதர்களால் வடிவமைத்துள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

இவை மட்டுமின்றி, ஓட்டுனரின் ட்ரைவ் ஸ்டைலை அறிந்து அதற்கேற்றாற் போல் செயல்படக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், ஆக்டீவ் ப்ளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங், தன்னிச்சையாக செயல்படக்கூடிய ப்ரேக்குகள், ரிமோட் பார்க்கிங் (ஓட்டுனர் காரை வெளிப்புறத்தில் இருந்து கீ ஃபாப் மூலமாக செயல்படுத்த முடியும்) மற்றும் ஜெனிசிஸின் கார்பே சிஸ்டம் உள்ளிட்டவையும் ஜி80 செடான் காரில் உள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

இதில் கார்பே அமைப்பின் மூலமாக ஓட்டுனர் பண பரிமாற்றங்களை காரின் இன்போடெயின்மெண்ட் திரையின் மூலமாக செய்ய முடியும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த புதிய காரில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினானது 304 பிஎச்பி பவரையும், 422 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

மற்ற 3.5 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜின் 380 பிஎச்பி பவர் மற்றும் 530 என்எம் டார்க் திறனையும், 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் 210 பிஎச்பி மற்றும் 441 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கக்கூடியவை. இந்த மூன்று என்ஜின்களும் ஆற்றலை பின்சக்கரத்தின் மூலமாகவோ அல்லது அனைத்து சக்கரங்களின் மூலமாகவோ காருக்கு அளிக்கவுள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய ஜெனிசிஸ் ஜி80 செடான் கார்...

ஹூண்டாய் நிறுவனம் அதன் ப்ரீமியம் கார்களுக்கான ஜெனிசிஸ் ப்ராண்ட்டை இந்தியாவிலும் மிக விரைவில் கொண்டுவரவுள்ளது. முன்னதாக புதிய ஜிவி80 எஸ்யூவி காரை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த இரு மாடல் கார்கள் தான் ஜெனிசிஸ் ப்ராண்ட்டின் இந்திய சந்தைக்கான துவக்க கால அறிமுக மாடல்களாகும்.

Most Read Articles
English summary
New Genesis G80 sedan revealed
Story first published: Tuesday, March 31, 2020, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X