உலகின் மாபெரும் வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

உலகின் மாபெரும் வாகன கண்காட்சிகளில் ஒன்றான ஜெனிவா வாகன கண்காட்சிக்கு ஸ்விட்சர்லாந்து அரசு தடைவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இந்தியாவில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வாகன கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், நடப்பாண்டிற்கான வாகன கண்காட்சி கிரேட்டர் நொய்டா மற்றும் தலைநகர் டெல்லியில் இனிதே நடைபெற்று முடிந்தது.

2020ம் ஆண்டிற்கான இந்த வாகன கண்காட்சியில் பல பிரம்மிப்பை ஏற்படுத்தும் புது முக தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இதேபோன்று, உலக நாடுகள் பலவற்றிலும் வாகன கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடைபெறும் வாகன கண்காட்சியிலேயே மிக முக்கியமானதாக ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் ஜெனிவா சர்வதேச மோட்டார் ஷோ காட்சியளிக்கின்றது.

மற்ற நாடுகளில் நடைபெறுவதைக் காட்டிலும் இந்த சர்வதேச வாகன கண்காட்சிக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரியளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

குறிப்பாக சர்வதேச அளவில் இயங்கும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கு கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. அவ்வாறு, நடப்பாண்டிற்கான ஜெனிவா வாகன கண்காட்சியையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தன சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள். இதில், அவற்றின் புதிய தயாரிப்புகள் பலவற்றையும் அறிமுகம் செய்ய முனைப்புடன் இருந்தன.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த எண்ணத்தை முழுவதுமாக சிதறிடித்துள்ளது கோவிட்-19 எனப்படும் (கொரோனா) கொடிய வைரஸ்.

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது கோவிட்-19 வைரஸ். இந்த வைரஸின் தீவிரம் அண்மைக் காலங்களாக தீவிரமடைந்துள்ளது. தற்போது இந்த வைரஸின் தாக்கத்தால் பல ஆயிரம் பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று, சில ஆயிரம் மக்கள் தங்களின் உயிரையும் இழந்துள்ளனர்.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

குறிப்பாக இதன் தாக்கம், வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வைரஸின் பாதிப்பு மற்றும் பின்விளைவுகள் பற்றிய தகவலை இதுவரை சீன அரசு முழுமையாக வெளியிடவில்லை. மாறாக, அதுகுறித்து தகவல் பரப்பும் ஊடகவியளாளர்களை தண்டிக்கும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது சீன அரசு.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இந்த வைரஸின் தாக்கம் சீனாவிலேயே மிக தீவரமாக காணப்பட்டாலும், அதைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன. இதன் வெளிப்பாடகவே, மார்ச் 5 முதல் 15ம் வரை நடைபெறவிருந்த ஜெனிவா வாகன கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இந்த கண்காட்சி பல ஆயிரக் கணக்கானோரை ஈர்க்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலையில் ஸ்விட்சர்லாந்து அரசு வாகன ஷோவிற்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.

இதுகுறித்து ஜெனிவா நகரத்தின் மூத்த அதிகாரியான அன்டோனியோ ஹோட்ஜர்ஸ், "நடப்பாண்டிற்கான ஜெனிவா சர்வதேச வாகன கண்காட்சி நிச்சயம் நடைபெறாது" என தெரிவித்தார்.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இங்கு பல ஆயிரம் மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. அப்போது, உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தாலக மாறியிருக்கும் கோவிட்-19 வைரஸ் ஒருவருக்கொருவர் கலந்துரையாடும்போது மிக எளிதில் பரவி விடாலம் என்று அஞ்சப்படுகின்றது. இதன் வெளிப்பாடாகவே வாகன கண்காட்சி ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜெனிவா அரசு தரப்பில் காரணம் கூறப்பட்டுள்ளது.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இதுமட்டுமின்றி, திருவிழாக்கள் மற்றும் அரங்குகளில் அதிகளவில் மக்கள் கூடுவதற்கும் குறிப்பிட்ட தடைகளை ஸ்விஸ் அரசு மேற்கொண்டிருக்கின்றது. ஆனால், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்துகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

குறிப்பாக, ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதற்கு முழுவதுமாக கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சில குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி ரத்து - 1,000 பேர் கூடவும் தடை.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...

இந்த விதிகள் எப்போது தளர்வு செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து, வாகன கண்காட்சி ரத்து குறித்து வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Geneva Motor Show 2020 Cancelled Due To Coronavirus Alert. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X