அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா

அவசரமாக சென்றுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாதவாறு சிறுவன் ஒருவர் இடைமறைத்தவாறு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறியே வாகனங்களை இயக்குகின்றனர். குறிப்பாக, சாலை போக்குவரத்தில் ஒழுங்கு கடைபிடிக்காத நிலையே காணப்படுகின்றது. அவர்கள் வளைந்து, நெலிந்து செல்லுகின்ற காரணத்தினால், மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் இதுபோன்ற செயலினால் அவசர வாகனங்களும் சிக்கும் சூழல் ஏற்படுகின்றது.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

அந்தவகையிலான ஓர் சம்பவம்தான் தற்போது யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கோவாவில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன், அவசரமாக சென்றுக் கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகின்றது.

18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனத்தை ஓட்டுவதையே இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பதில்லை.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

ஆனால், இங்கு இந்த சிறுவன் காரை ஓட்டிச் சென்றது மட்டுமின்றி, சைரன் கிடுகிடுக்க வந்துக் கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்றுள்ளார். சிறுவனின் இந்த கண்டிக்கத்தக்க செயல் கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக சிறுவன் பயன்படுத்திய ஹூண்டாய் க்ரெட்டா காரை கோவா போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

மேலும், அச்சிறுவன் மீது குற்ற பிரிவின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர். சிறுவனின் இந்த அலட்சியமான செயல்குறித்த வீடியோவை ஆம்புலன்ஸ் ஊழியர், செல்போனில் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில், சிறுவன் தெரிந்தே ஆம்புலன்சுக்கு வழி விடாமல் செல்வது நிரூபனம் செய்யப்பட்டுள்ளது.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

அவசரம் காரணமாக பல முறை ஹாரன் அடித்தும், முன்னேறிச் செல்ல முயற்சித்தும் அச்சிறுவன் வழி விடமாலே சென்றுள்ளார். அதாவது, இரு வழிச் சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்லுகின்ற வகையில், பாதையின் நடுவில் அவர் சென்றார்.

மேலும், ஆம்புலன்சுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிக வேகத்தில் அவர் பறந்ததையும் வீடியோவில் நம்மால் காண முடிகின்றது.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

அதேசமயம், சிறுவன் இயக்கிச் சென்ற ஹூண்டாய் க்ரெட்டா காரைத் தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களும் ஆம்புலன்சுக்கு வழி விட்டு ஒதுங்கி சென்றுள்ளன.

அவ்வாறு ஒதுங்கிய வாகனங்களையும் கூட அச்சிறுவன் அதி வேகத்தில் ஓவர்-டேக் செய்து சென்றார். பின்னர், நெடுஞ்சாலை வந்தவுடன் திடீரென பிரேக் பிடித்து ஆம்புலன்சில் இருந்தவர்களை அதிர வைத்தார்.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

இதுபோன்ற வேண்டத்தகாத செயலின் காரணமாக ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கோவா வெர்னா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 சிறுவன் க்ரெட்டா காரை இயக்கிச் சென்றது தெரியவந்தது. அச்சிறுவன் தெரிந்தே ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற குற்றத்தின்காரணமாக பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர்.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

குறிப்பாக, உரிமம் இன்றி வாகனத்தை இயக்கியது, அவசர வாகனமான ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றது உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, அச்சிறுவனை சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. நீண்ட தூரம் இடைமறைத்த சிறுவன்.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தாங்க தெரியுமா?

இந்த சம்பவத்தில் சிறுவனை காரை இயக்க அனுமதித்த பெற்றோர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என தெரியவில்லை. முந்தைய காலங்களில் சிறுவர்கள் வாகனத்தை இயக்கிய காரணத்திற்காக சிறுவருக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதேமாதிரியான நடவடிக்கை இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும் வழங்கப்படலாம் என தெரிகின்றது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், சிறுவனுக்கு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வழங்கலாம் என கூறப்படுகின்றது. முந்தையக் காலங்களில் அவசர கால வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்த வாகனங்களுக்கு இதே மாதிரியான தண்டனைதான் வழங்கப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Goa Cops Busted Hyundai Creta For Obstructing Ambulance. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X