இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம்.

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்திய கார் சந்தையில் வர்த்தகத்தை துவங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே, சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் மூலமாக இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவக்கிவிட்டது.

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் மாடலான ஹெக்டர் எஸ்யூவிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சீனாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான கிரேட்வால் மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில் களமிறங்க இருப்பதை ட்விட்டர் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

நமஸ்தே இந்தியா என்று ட்விட்டரில் தெரிவித்து தனது இந்திய வருகையை இந்தியர்களுக்கு பரைசாற்றி உள்ளது. மேலும், செயிக் குழுமம் எப்படி தனது கீழ் செயல்பட்டு வரும் எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ததோ, அதே பாணியில் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கீழ் செயல்பட்டு வரும் ஹவல் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

இந்தியாவில் ஹவல் பிராண்டை முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், இந்திய கார் வர்த்தகத்திற்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

இந்தியாவில் கார் ஆலை அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. தலேகான் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

MOST READ: ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ கார்களை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்.. எதுக்கு இவ்வளவு விலைனு தெரியுமா..?

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை கையகப்படுத்தும் பணிகள் முடிந்து கார் உற்பத்தியை துவங்குவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: சொன்னா எங்க கேக்கறாங்க... டூ வீலர் தீப்பற்றி எரிந்ததால் சென்னையில் பரபரப்பு... காரணம் என்ன தெரியுமா?

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஹவல் எச்-6 கூபே ரக கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது குறித்த ஸ்பை படங்கள் வெளியானது. இந்த கார்தான் இந்தியாவில் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!

இந்த புதிய எஸ்யூவி ரக கார் அடுத்த ஆண்டு மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர ரக எஸ்யூவி மாடல்களுக்கும், பிரிமீயம் ரக எஸ்யூவி மாடல்களுக்கும் இந்த கார் போட்டியை தரும்.

Most Read Articles

மேலும்... #ஹவல்
English summary
Chinese automobile giant, Great Wall Motors has officially Confirmed of its entry into India.
Story first published: Thursday, January 2, 2020, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X