ஆட்டோ எக்ஸ்போவில் 4 புதிய எஸ்யூவி மாடல்களுடன் அதிரடி காட்டிய கிரேட்வால் மோட்டார்ஸ்!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் 4 புதிய எஸ்யூவி மாடல்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. கிரேட்வால் மோட்டார்ஸ் கீழ் செயல்படும் பிரபல எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஹவல் தயாரிப்புகளுடன் இந்திய சந்தையை கலக்க திட்டமிட்டுள்ளது.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

இதன்படி, ஹவல் பிராண்டில் 4 புதிய எஸ்யூவி மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் கிரேட்வால் மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி உள்ளது. ஹவல் பிராண்டின் பிரபலமான எஃப்5 எஸ்யூவி, எஃப்7 எஸ்யூவி, எஃப்7எக்ஸ் மற்றும் எச்9 ஆகிய 4 எஸ்யூவி மாடல்கள் கிரேட்வால் மோட்டார்ஸ் அரங்கத்தை அலங்கரிக்கின்றன.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

இதில், ஹவல் எஃப்5 எஸ்யூவியானது கடந்த 2018ம் ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 169 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

அடுத்து, ஹவல் எஃப்-7 எஸ்யூவியும் வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவில் ஹவல் எச்பி-03 என்ற கான்செப்ட் அடிப்படையில் இது தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

கடந்த 2018ம் ஆண்டு மாஸ்கோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்த ஹவல் எஃப்-7 எஸ்யூவி அதே ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அசத்தலான எஸ்யூவியில் எஃப5 காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இது எம்ஜி ஹெக்டர் போன்று மிட்சைஸ் எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும்.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

ஆட்டோ எக்ஸ்போவில் எஃப்7எக்ஸ் என்ற மற்றொரு க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலையும் கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது. இது தனித்துவமான தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு அமையும்.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

அடுத்து ஹவல் பிராண்டில் முழு அளவிலான மற்றொரு எஸ்யூவி மாடலாக எச்9 எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இணையான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

 ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்டும் கிரேட்வால் மோட்டார்ஸ்... 4 எஸ்யூவி மாடல்களுடன் சரவெடி!

ஹவல் பிராண்டில் மட்டுமல்லாது, உலகின் மிகவும் குறைவான விலையிலான ஆர்1 எலெக்ட்ரிக் கார் மாட லையும் கிரேட்வால் மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி உள்ளது. அதன் விபரங்களை மற்றொரு செய்தியில் பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Great Wall Motors has unveiled 4 new Haval SUV Models at Auto Expo 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X