அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

டெல்லியை தொடர்ந்து தற்போது மற்றொரு மாநில அரசும் மின்சார வாகனங்களுக்கு மானிய தொகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக உள்ளன.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

அத்துடன் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும். ஆனால் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையை விட மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க மக்கள் தயங்குகின்றனர். எனவே மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு சமீபத்தில், மின்சார வாகன கொள்கையை அறிவித்தது. இதில், மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோன்ற அறிவிப்பை முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் மாநில அரசும் தற்போது வெளியிட்டுள்ளது.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் பருவநிலை மாற்ற துறை 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மின்சார வாகனங்களை (இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்) ஊக்குவிப்பதற்கான புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி மின்சார வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ரிக்ஸா ஓட்டுனர்கள் மற்றும் சுய தொழில் புரிய விரும்பும் நபர்களுக்கு குஜராத் மாநில அரசு மானியம் வழங்கவுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு அல்லது அதற்கும் மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்கினால், 12,000 ரூபாய் வரை அரசு மானியமாக கிடைக்கும்.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

அதே நேரத்தில் ரிக்ஸா ஓட்டுனர்கள் மற்றும் சுய தொழில் புரிய விரும்பும் நபர்கள் மின்சார மூன்று சக்கர வாகனங்களை வாங்கினால், 48,000 ரூபாய் வரை அரசு மானியமாக கிடைக்கும். இது ஒரு வாகனத்திற்கு வழங்கப்படும் மானிய தொகையாகும். இதற்கு குஜராத் மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

பொதுமக்கள் மட்டுமல்லாது, மின்சார வாகன உற்பத்தியாளர்களும் இதனை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் குஜராத் சாலைகளில் குறைந்தபட்சம் 10,000 மின்சார இரு சக்கர வாகனங்களும், 5,000 மின்சார மூன்று சக்கர வாகனங்களும் ஓட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

அதே சமயம் வரும் 2022ம் ஆண்டிற்குள் குஜராத் மாநில சாலைகளில் 1 லட்சம் மின்சார வாகனங்கள் இயங்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு விரும்புகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?

மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவதுடன் மட்டுமல்லாது, சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் கட்டமைப்பதற்கான முயற்சிகளையும் குஜராத் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Gujarat Chief Minister Vijay Rupani Announces Electric Vehicle Subsidy Scheme. Read in Tamil
Story first published: Monday, September 21, 2020, 2:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X