நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

அதிநவீன இயந்திர துப்பாக்கிகளை ஏந்திய காராக மஹிந்திரா ஸ்கார்பியோ தயார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

வாகனங்களை மாடிஃபை செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். அவ்வாறு, மாடிஃபை செய்யப்பட்ட பல வாகனங்களை போலீஸார் இதற்கு முன்பாக பறிமுதல் செய்திருக்கின்றனர். ஆனால், இங்கு போலீஸாரின் பயன்பாட்டிற்காகவே மிகவும் ஸ்பெஷலாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார்கள் மாடிஃபை செய்யப்பட்டுள்ளன.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

குறிப்பாக, இந்த காரில் பயங்காரவாதத்தை ஒடுக்குவதற்காக அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கணக்கானோரைக்கூட கண்ணிமைக்கும் நேரத்தில் கொல்லும் அல்லது விரட்டியடிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

நகரத்தின் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கான நோக்கில் இந்த மூன்று புத்தம் புதிய அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் அடங்கிய கார்களை குருகிராம் காவல்துறையில் இணைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

இதனை, டிஎல்எஃப் நிறுவனத்தின் சார்பாக குருகிராம் போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் டிஎல்எஃப் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் குருகிராம் பகுதியின் கமிஷனர் முஹமத் அகில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களின் முன்னிலையிலேயே இந்த கார்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

இந்த மூன்று மஹிந்திரா காரின் மேற்பரப்பு கூரையிலும் மாற்றம் செய்யப்பட்டு, அந்த பகுதியிலேயே இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கூரை பகுதியில் துப்பாக்கி பொருத்தப்பட்டிருப்பதால் இது எளிதாக குறி வைத்து குற்றவாளிகளை சுட்டுத்தல்ல உதவும். எல்எம்ஜி (LMG) எனப்படும் இலகு ரக இயந்திர துப்பாக்கிகள்தான் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது, கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ண முடியாதளவில் குண்டு மழியை பொழியும் திறன் வாய்ந்தது.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

மஹிந்திரா காரில் இந்த துப்பாக்கி நிலை நிறுத்துவற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த இயந்திர துப்பாக்கியை கையாளும் வீரர், 360 டிகிரி வரை சுழன்று சுடுகின்ற அளவிற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அந்த வீரரால் அச்சுறுத்தல் வாதிகள் தங்களை நெருங்காவே முடியாத அளவிற்கு துப்பாக்கியைக் கொண்டு சுழன்று சுழன்று சரமாரியாக சுட்டுத்தல்ல முடியும்.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

இதுமட்டுமின்றி, எந்த மாதிரியான கால சூழ்நிலையிலும் சுற்றியிருக்கும் பகுதியை தெளிவாக காட்டும் வகையில் பனி மின் விளக்குகள் மேற்கூரை பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது, அடர்ந்த இருட்டு, மழை மற்றும் பனி போன்ற காலநிலையிலும் மிக தெளிவான பார்வையை கொடுக்கும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள மூன்று அதிநவீன ஆயுதம் ஏந்திய ஸ்கார்ப்பியோவில் ஒன்று கோல்ஃப் கோர்ஸ் சாலையிலும், மற்ற இரண்டு சைபர் மையங்களிலும் நிலை நிறுத்தப்பட உள்ளன.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

இந்த வாகனங்கள் பாதுகாப்ப பணிகளுக்காக மட்டுமின்றி ரோந்து பணிக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இத்துடன், விவிஐபிக்களின் கான்வாயிலும் இந்த கார்கள் பங்கேற்க இருக்கின்றன. இதுமட்டுமின்றி, இந்த கார்கள் அவசர கால எண்ணான 100 உடன் இணைக்கப்பட உள்ளது.

ஆகையால், அவசர காலை தேவையின்போது பேட்ரோல் வாகனங்களாகவும் இது பயன்பட இருக்கின்றது. எனவே, இந்த ஆயதமேந்திய மஹிந்திரா கார் ஒன்றுக்கும் மேற்பட்ட ரோல்களில் குருகிராம் காவல்படையில் சிறப்பு பணியாற்ற இருக்கின்றது.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

இதுபோன்று, குருகிராம் போலீஸில் ஆயுதமேந்திய நவீன கார்கள் இணைக்கப்படுவது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இதேபோன்று நவீன ரக கார்கள் ஆறு இணைக்கப்பட்டன. வெள்ளை நிற வண்ணத்தில் போலீஸுக்கு உரித்தான ஸ்டிக்கர்களை ஏந்தி அந்த வாகனம் தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்களையும் அரசு அல்லாத நிறுவனங்களே காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கியிருந்தன.

நவீன ரக இயந்திர துப்பாக்கிகளுடன் தயாரான 3 ஸ்கார்பியோ கார்கள்... எதற்காக தெரியுமா...

பாதுகாப்பான குருகிராம் சமூகம் (Society for Safe Gurugram) என்ற திட்டத்தின் அடிப்படையில் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் இதனை குருகிராம் போலீஸுக்கு வழங்கி வருகின்றது. இந்த வாகனம் குறிப்பாக சட்ட ஒழுங்கை நகரம் முழுவதும் நிலைநாட்டும் பணிக்காக பயன்படுத்த இருக்கின்றது குருகிராம் போலீஸ்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gurugram Police Received Modified Mahindra Scorpio From DLF. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X