கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

சீனாவை சேர்ந்த க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இவி பிரிவு தனது மூன்றாவது மற்றும் லேட்டஸ்ட் தயாரிப்பாக ஒரா ஆர்2 மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

தற்போதைக்கு ஒரா ஆர்2 என அழைக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரின் இயந்திர பாகங்கள் குறித்த தகவல்கள் எதையும் க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் இப்போதைக்கு வெளியிடவில்லை. முதலாவதாக சீன சந்தையில் விற்பனை துவங்கவுள்ள இந்த காம்பெக்ட் எலக்ட்ரிக் காரின் அறிமுகம் அங்கு இந்த ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

முன்னதாக இந்நிறுவனம் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் உலகின் மலிவான எலக்ட்ரிக் காராக ஆர்1 மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த எலக்ட்ரிக் காரின் இவி ப்ளாட்ஃபாரத்தை தான் ஆர்2 மாடலும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

இருப்பினும் ஒரா ஆர்2 எலக்ட்ரிக் கார் ஆர்1-ஐ காட்டிலும் 15மிமீ அதிகமாக 2490மிமீ-ல் வீல்பேஸை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இதில் பொருத்தப்படவுள்ள எலக்ட்ரிக் மோட்டாரும் கூடுதல் ஆற்றலை வழங்கும் விதத்தில் இருக்கும் என தெரிகிறது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

எந்த அளவிற்கு என்றால் ஆர்1 காரின் எலக்ட்ரிக் மோட்டாரை காட்டிலும் 15 பிஎச்பி அதிகமாக 63 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதனால் ஒரா ஆர்2 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 401கிமீ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்1 எலக்ட்ரிக் காருக்கு இரு விதமான ரேஞ்ச்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று 28.5kWh பேட்டரியுடன் 300கிமீ, மற்றொன்று 33kWh பேட்டரியுடன் 350கிமீ ஆகும். இந்த புதிய காம்பெக்ட் இவி காரில் இயக்க ஆற்றலை காட்டிலும் அதன் டிசைனில் தான் க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக பணியாற்றியுள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

இதனால் பூனை வடிவிலான தோற்றத்தை பெற்றுள்ள இந்த இவி காரில் மென்மையான வளைவுகள், வட்ட வடிவிலான முனைகள், பெட்டகம் வடிவிலான தோற்றத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன. பம்பர் ஆனது வாய்-வடிவத்திற்காக துளையிடப்பட்ட டிசைனில் க்ரில் மற்றும் செவ்வக வடிவிலான ஹெட்லேம்ப்கள் உடன் உள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சார்ஜ் துளை காரின் முன்புறத்தில் இடது புறமாக வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்புறத்தில் விண்ட்ஸ்க்ரீனானது கண்ணாடியிலான டெயில்கேட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்க்ரீனின் பெரும்பகுதியை பின்புற டெயில்லேம்ப்களே ஆக்கிரமித்துள்ளன. இவற்றிற்கு மத்தியில் ஒரா ப்ராண்ட்டின் லோகோ உள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

உட்புறத்தில் ஒராவின் இந்த மூன்றாவது தயாரிப்பு கார், மெர்சிடிஸ் மாடல்களுக்கு இணையாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்காக பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் திரையை கொண்டுள்ளது. இது 23 இன்ச் கொண்டதாக ஒரா ப்ராண்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

விலை குறைவான எலக்ட்ரிக் காராக இருப்பினும் ஆர்2 எலக்ட்ரிக் காரில் 6 காற்றுப்பைகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம் உள்ளிட்டவற்றுடன் லேன் அசிஸ்ட்டையும் ஒரா நிறுவனம் வழங்கியிருக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் விலை கொண்ட ஆர்1 எலக்ட்ரிக் மாடலுக்கு மேலே ஒராவின் இந்த புதிய இவி கார் நிலைநிறுத்தப்படவுள்ளது.

கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...

ஒரா ஆர்1 மாடலின் விலை சீனாவில் அரசாங்கத்தின் சலுகைகள் எல்லாம் போக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.5 லட்சமாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் ஆர்2 என்பது இந்த காம்பெக்ட் இவி காருக்கு தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பெயர் தான். இந்த எலக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Most Read Articles
English summary
Great Wall Motors’ New Ora R2 Compact EV To Offer 400km Range
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X