ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... இன்னோவா போட்டியாளர்!

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கார் மாடலின் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

சீனாவை சேர்ந்த எஃப்ஏடபிள்யூ - ஹெய்மா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் அடியெடுத்து வைத்துள்ளது. ஹெய்மா பிராண்டில் எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களை காட்சிப்படுத்தி உள்ளது. இதில், ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நிகரான ரகத்திலான மாடலாக இருக்கும்.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் மஸேரட்டி கார்கள் போன்ற க்ரில் அமைப்புடன் மிக வசீகரமாக உள்ளது. கூர்மையான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, கருப்பு வண்ண பில்லர்கள், ஃப்ளோட்டிங் வகை கூரை அமைப்புடன் தனித்துவமாக இருக்கிறது.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த காரில் அலாய் வீல்கள், ரூஃப் ஸ்பாய்லர், அழகிய வீல் ஆர்ச்சுகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. பினஅபுறத்தில் சரியான அளவில் டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர் அமைப்பு ஆகியவை சிறப்பு சேர்க்கிறது. ஏ பில்லர் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

அதேபோன்று, சி பில்லரில் கருப்பு வண்ண தடுப்பு மூலமாக இந்த காரின் கூரை பறப்பது போன்ற தோற்றத்தை வழங்குகிறது. புதிய ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த காரின் டேஷ்போர்டு அமைப்பு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இருப்பது போன்று இரட்டை திரை அமைப்புடன் உள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு ஒரே திரையாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய ஹெய்மா 7எக்ஸ் காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 195 பிஎஸ் பவரையும், 293 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய ஹெய்மா 7எக்ஸ் கார் 4,815 மிமீ நீளமும், 1,874 மிமீ அகலமும், 1,720 மிமீ உயரமும் கெண்டதாக இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,860 மிமீ ஆக உள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட கூடுதல் அகலம் மற்றும் கூடுதல் வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
Chinese carmaker Haima has revealed the 7X MPV, which is equivalent to the Toyota Innova Crysta, at Auto Expo 2020.
Story first published: Thursday, February 6, 2020, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X