சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

சீன நிறுவனமான எஃப்ஏடபிள்யூ-வின் பிரபல மாடல்களில் ஒன்றான ஹைமா 8எஸ் கார் இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், சீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனமான எஃப்ஏடபிள்யூ, அதன் ஹெய்மா பிராண்டிலான வாகனங்களை இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஹெய்மா பிராண்டின்கீழ் சில வாகனங்களை அது காட்சிப்படுத்தியது. அதில் ஒன்றுதான் ஹெய்மா 8எஸ் காம்பேக்ட் எஸ்யூவி. இந்த காரை கடந்த ஆண்டுதான் எஃப்ஏடபிள்யூ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்தது.

இந்த எஸ்யூவி காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 195 பிஎஸ் பவரையும், 293 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

இந்த ஹெய்மா 8எஸ் எஸ்யூவி காரானது எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் டக்சன், ஜீபா காம்பஸ், எம்ஜி எச்எஸ் மற்றும் ஹவல் எஃப்7 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக இதன் நீளம் 4565மிமீட்டரும், 1850மிமீ அகலம் மற்றும் 1682மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது. இதேபோன்று, வீல்பேஸ் 2700மிமீட்டரையும் கொண்டுள்ளது.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 8எஸ் கார் சிவப்பு நிறத்தில், 18இன்ச் ட்யூவல் டோன் அலாய் வீல்களைக் கொண்டு காட்சியளிக்கின்றது. இத்துடன், குரோம் பூச்சு கொண்ட க்ரில், எல்இடி ஹெடல்மேப், பம்பர் உள்ளிட்டவை கவர்ச்சியான தோற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

இதேபோன்று, இதன் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் இன்டிகேட்டர் மின் விளக்குகள் காரின் முன்பக்க பேனட்டில் நிறுவப்பட்டுள்ளன.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

தொடர்ந்து, இந்த காரின் ஃப்ளோட்டிங் டைப்பிலான ரூஃப்பில் பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 360 டிகிரி பார்க்கிங் கேமிரா மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பிரிமியம் வசதிகளும் காணப்படுகின்றன.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

எஃப்ஏடபிள்யூ நிறுவனத்தின் இந்த கார் இந்திய சந்தையில் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கணிப்பதற்காக ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஹெய்மா பிராண்டின் 7எக்ஸ் எம்பிவி மற்றும் இ1 என்ற எலெக்ட்ரிக் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

இந்த மின்சார கார் மலிவான விலைக் கொண்ட என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக இந்த கார் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இது பேர்ட் எலெக்ட்ரிக் இவி1 என்ற பெயரில் களமிறக்கப்பட உள்ளது.

சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?

இதன் பெயருக்கு ஏற்ப பறவைகளைப் போல் சந்தை முழுவதும் பரந்துவிரிந்த டிமாண்டை பெறும் என்பது அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Most Read Articles
English summary
Haima 8S Unveiled At Auto Expo. Read In Tamil.
Story first published: Friday, February 7, 2020, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X