352 கிமீ ரேஞ்ச், நினைத்து பார்க்க முடியாத பட்ஜெட். அசத்தும் ஹெய்மா எலெக்ட்ரிக் கார்!

ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

சீனாவை சேர்ந்த எஃப்ஏடபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படும் ஹெய்மா கார் நிறுவனம் தற்போது நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் மூன்று கார்களை பார்வைக்கு வைத்துள்ளது. அதில், ஹெய்மா இ1 என்ற எலெக்ட்ரிக் கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவை சேர்ந்த பேர்டு குழுமத்தின் கீழ் செயல்படும் பேர்டு எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணைந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது எஃப்ஏடபிள்யூ- ஹெய்மா நிறுவனம்.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த புதிய ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் காருக்கு ரூ.10 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாக பேர்டு நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், பட்ஜெட் விலையில் சிறந்த எலெக்ட்ரிக் கார் மாடலை எதிர்பார்ப்பவர்களின் ஆவலை இந்த எலெக்ட்ரிக் கார் தூண்டியிருக்கிறது.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

விலை குறைவாக இருக்கும் என்பதுடன், மறுபுறத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 352 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே, இது நிச்சயம் இந்தியர்களின் பட்ஜெட்டிற்கும், பயன்பாட்டிற்கும் மிகச் சிறந்த எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த காரில் 34kW பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

வடிவத்திலும் அடக்க வகை கார் மாடலாக இருப்பதால், நகர்ப்புறத்தில் தினசரி பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும். மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

 ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள பேர்டு குழுமத்தின் ஆலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இன்னும் 12 முதல் 15 மாதங்களில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Chinese car maker, Haima has revealed E1 budget electric car at Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X