Just In
- 2 hrs ago
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
- 5 hrs ago
இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- 5 hrs ago
கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக்!! ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்
- 21 hrs ago
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
Don't Miss!
- Movies
ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
- News
ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.. நானே முழு பொறுப்பு.. பிரதமர் போரிஸ் ஜான்சான் உருக்கம்
- Sports
வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா!
- Finance
டிக்டாக், ஹலோ மீது நிரந்தர தடை.. 2000 ஊழியர்களை பணிநீக்கம்..!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Lifestyle
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் மாஸ் காட்ட வரும் வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க!
வெளிநாட்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்று இந்திய மார்க்கெட்டில் மாஸ் காட்ட விற்பனைக்கு வரவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரில், கடந்த பிப்ரவரி 5ம் தேதி தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ நேற்றுடன் (பிப்ரவரி 12ம் தேதி) நிறைவடைந்தது. இதில், ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. இதில், சீன நிறுவனங்களும் அடக்கம்.

நடப்பாண்டு ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் ஒரு சில சீன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்தன. இதில், ஹெய்மா (Haima) என்ற நிறுவனம் முக்கியமானது. 7எக்ஸ் (7x), 8எஸ் (8s) மற்றும் இ1 (E1) என மொத்தம் 3 தயாரிப்புகளை ஹெய்மா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இதில், ஹெய்மா இ1 மாடல் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.

இதனால் இ1 எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவில் ஹெய்மா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் முதல் மாடலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021ம் ஆண்டின் கடைசியிலோ அல்லது 2022ம் ஆண்டின் தொடக்கத்திலோ ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹெய்மா இ1 என்பது சிறிய ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், மஹிந்திரா இகேயூவி100 (Mahindra eKUV100) உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும். ஹெய்மா இ1 காரில், 54 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 28.5 Kwh லித்தியம் அயான் பேட்டரியை ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 301 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது ஓரளவிற்கு சிறப்பான ரேஞ்ச் என்பதால், ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

ஹெய்மா ஆட்டோமொபைல் குழுமம் என்பது சீன மார்க்கெட்டில் புதிய பெயர் ஒன்றும் கிடையாது. இது சீன மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டதை போல், 2021ம் ஆண்டின் கடைசி அல்லது 2022ம் ஆண்டின் தொடக்கத்தில், இ1 எலெக்ட்ரிக் காரை ஹெய்மா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு, விலை குறைவான மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக உள்ளது.

இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலம் ஆகாமல் இருப்பதற்கு, அதன் அதிகப்படியான விலையே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே 10 லட்ச ரூபாய் என்ற விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய், ரெனால்ட் மற்றும் எம்ஜி போன்ற பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

இந்த சூழலில், ஹெய்மா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் இ1 எலெக்ட்ரிக் காரை இந்த விலையில் அறிமுகம் செய்தால், வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கு எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமடையாமல் இருப்பதற்கு வேறொரு முக்கியமான காரணமும் உள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான் அது.

இதன் காரணமாகவும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் கட்டமைக்கும் பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளன. எனவே ஹெய்மா நிறுவனம் இ1 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும்போது, அந்த பிரச்னையும் ஓரளவிற்கு குறைந்திருக்கும்.