மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

ஹார்லி டேவிட்சன் பைக்கொன்று விலையுயர்ந்த லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காருக்கு இணையான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம்.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

மாடிஃபிகேஷன் உலகில், பட்ஜெட் விலையுடையக் கார் லக்சூரி காருக்கு இணையாக மாடிஃபை செய்வது, வழக்கமான பைக் அட்வென்சர் அல்லது ஸ்போர்ட்ஸ் பைக்காக மாறுவது உள்ளிட்டவற்றைதான் நாம் இதற்கு முன்பாக பார்த்திருப்போம். ஏன், சில நேரங்களில் சாதாரண மினி பேருந்து சொகுசு கப்பலுக்கு இணையாக மாறியதைப் பற்றியும்கூட நாம் பார்த்திருப்போம்.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

ஆனால், முற்றிலும் வித்தியாசமாக பைக் ஒன்று லக்சூரி காருக்கு இணையாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை நாம் இங்கு இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

பொதுவாக வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவதை இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் அனுமதிக்கவில்லை.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

ஏனென்றால், கஸ்டமைஸ் செய்யும்போது வாகனத்தின் உண்மை தன்மை மாறுவதுடன், குற்றச் சம்பவங்களில் அந்தவாகனம் ஈடுபடுத்தப்படும் பட்சத்தில் அதனை எளிதில் இனம் காண முடியாது. இதுபோன்ற சிக்கலான காரணங்களுக்காகவே இந்திய வாகன சட்டம் மாடிஃபிகேஷன் அனுமதி வழங்குவதில்லை.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இருப்பினும், விதிகளைப் பெரிதாக பொருட்படுத்தாமல் ஒரு சிலர் வாகனங்களை மாடிஃபைச் செய்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறு, பிரீமியர் பத்மினி, டாடா எஸ்டேட், ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா உள்ளிட்ட கார்களின் புதிய அவதாரம் பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இந்த நிலையிலேயே, தற்போது புதிய அவதாரத்திற்கு (நாம் இதுவரை கண்டிராத அப்கிரேட்டிற்கு) மாறியிருக்கும் பைக்கைப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

பைக்கின் லுக்கை பார்த்தவுடன் உங்களில் பலருக்கு, இந்த பைக் மாடிஃபை சம்பவம் இந்தியாவில்தான் நடைபெற்றதா? என கேட்கத் தோன்றும். இதற்கு எங்களது பதில், உங்களது சந்தேகம் சரியே. இந்த பைக் மாடிஃபிகேன் இங்கிலாந்தில் நடைபெற்றிருக்கின்றது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

ஆம், இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவர், அவரது லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காருக்கு இணையாக ஹார்லி டேவிட்சனின் பைக்கை மாடிஃபை செய்ய விரும்பியுள்ளார். இதனடிப்படையிலேயே அந்த சூப்பர் லக்சூரி ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான தோற்றம் உலக புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சனின் ட்வின் எஞ்ஜினைக் கொண்ட பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இதனால், இந்த பைக் தற்போது ஹார்லி டேவிட்சன் அவுட்டர்லிமிட்டாக உருவெடுத்துள்ளது. குறிப்பிட்ட கூற வேண்டுமானால், லம்போர்கினி அவென்டேடார் காரின் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்பவாறு ஹார்லி பைக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இதற்காக காரின் வெளிப்புறத்திற்கு வழங்கியதைப் போலவே வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் பைக்கிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே அவென்டேடார் மற்றும் ஹார்லியை இணைக்கும் முதன்மையான மாற்றமாக இருக்கின்றது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இதுமட்டுமின்றி, இருக்கை அமைப்பிற்கும் காரின் வீல் வளைவிற்கு ஏற்பவாறு வளைந்த வெட்டு தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அந்த இருக்கைக்கு சிவப்பு நிற தையல் பணிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்தோடு வேலை முடிந்துவிட்டது என எண்ணிக் கொள்ளாதீர்கள் இனிதான் உச்சபட்ச மாற்றங்களே இருக்கின்றன.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

அதவாது, காரின் உயரம் குறைந்த மற்றும் நீளமான தோற்றத்திற்கு ஏற்பவாறும் இந்த பைக்கின் உருவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக கஸ்டமைஸ்ட் அலாய் வீல், டயர்கள் மற்றும் சஸ்பென்ஷன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இத்துடன் காரின் உடல் பகுதியில் ஆங்காங்கே சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருப்பதைப் போன்று, பைக்கின் வளைவுகளை கூடுதல் மெருகேற்றிக் காட்டும் வகையில் சிவப்பு நிற லைன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து விதமான மாற்றங்களால் ஹார்லி டேவிட்சன் பைக் மிகவும் கவர்ச்சியான லம்போர்கினி அவென்டேடார் காருக்கு இணையானதாக மாறியிருக்கின்றது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இந்த தரமான மாடிஃபிகேஷனுக்காக லம்போர்கினி காரின் உரிமையாளர், அந்நாட்டில் மாடிஃபிகேஷனுக்காக பிரத்யேகமாக இயங்கு வரும் தண்டர்பைக்கைதொடர்ப்பு கொண்டுள்ளார். இந்நிறுவனம் மிகவும் ஸ்டைலான மற்றும் நாக்கை சப்புகொட்ட வைக்கும் லுக்கிற்கு ஹார்லி பைக்கை மாற்றியிருக்கின்றது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

இந்நிறுவனம், ஜெர்மனில் கடந்த 1980ம் ஆண்டில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த தண்டர்பைக், பிற்காலங்களில் வாகனங்களை மாடிஃபை செய்யும் பணியைத் தொடங்கியது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

அதிலும், ஹார்லி டேவிட்சன் பைக்குகளை மாடிஃபை செய்வதில் கை தேர்ந்த நிறுவனம் அது தற்போது மாறியுள்ளது. எனவேதான் லம்போர்கினி காரின் உரிமையாளர் தண்டர்பைக் நிறுவனத்தை நாடியுள்ளார். அவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நல்ல பலன் கிடைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

தோற்ற மாற்றத்தைத் தவிர பைக்கின் எஞ்ஜினில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே, ட்வின் கேம் 120ஆர் எஞ்ஜின் அதன் உண்மையான திறனிலேயே காட்சியளிக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

Most Read Articles
English summary
Harley Davidson Bike Converted As A Mini Lamborghini Aventador. Read In Tamil.
Story first published: Friday, May 15, 2020, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X