பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கான்செப்ட் மாடல் குறித்த விபரங்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கீழ் செயல்படும் ஹவல் எஸ்யூவி பிராண்டில் பல புதிய மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த பட்டியலில், ஹவல் எச் என்ற புத்தம் புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவியானது பிளக் இன் ஹைப்ரிட் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வேறு எந்த தொழில்நுட்ப தகவலும் வெளியிடப்படவில்லை. இது ஹவல் பிராண்டின் மிட்சைஸ் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவி கான்செப்ட் மிக பிரம்மாண்ட தோற்றத்தை பெற்றிருக்கிறது. புதிய ஹவல் எச் கான்செப்ட் மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், 19 அங்குல அலாய் வீல்கள், T வடிவிலான டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த கான்செப்ட் மாடலில் ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தொடு உணர் பொத்தான் மூலமாக கியர் தேர்வு செய்யும் கட்டுப்பாட்டு அமைப்பு, எல்இடி லைட் பார் ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிக்கு எதிராக ஒரு திரை அமைப்பு உள்ளது. நேவிகேஷன் உள்ளிட்ட தகவல்களை இந்த திரை மூலமாக பெற முடியும்.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஹவல் எச் கான்செப்ட் காரில் பெரிய அளவிலான பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோனாமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், முன்புற மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

 பிரம்மாண்டமான ஹவல் எச் கான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் கார் விற்பனையை துவங்குவதற்கு கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அப்போது, இந்த புதிய மாடலின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை எஸ்யூவி மாடல் குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Great Motors has revealed New Haval SUV concept at Auto Expo 2020.
Story first published: Wednesday, February 5, 2020, 20:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X