இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சு

கேட்பாரற்று கைவிடப்பட்டிருக்கும் பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

உலகின் மிகவும் புகழ்வாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனமும் ஒன்று. பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தைச் சுற்றி பல்வேறு கட்டுக்கதைகள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, இக்காரை வாங்க வருபவர்கள் சமூகத்தில் பெரிய செல்வாக்கு நிறைந்தவராகவோ அல்லது பரம்பரைப் பணக்காரராகவோ இருக்க வேண்டும் என இப்படியெல்லாம் கதைகள் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த கட்டுக்கதைகள்குறித்த தகவலைக் கடைசியாக பார்க்கலாம்.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

இந்த தகவலுக்கு முன்னதாக, இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல்கள் கேட்பரற்று, கைவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவை ஒன்றொன்றும் பல கோடி மதிப்பிலானவை ஆகும். இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்பும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவையாக இருக்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சில செல்வந்தர்களால்கூட வாங்க முடியாத அளவிற்கு அதிக விலையைக் கொண்டதாக இக்கார்கள் இருக்கின்றன. ஒன்று அல்லது இரண்டு கோடிகளுக்கும் அதிகமான விலையை அவைக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இந்நிறுவனத்தின் கார்களை இந்திய சாலைகளில் நம்மால் மிகவும் அரிதாகவே பார்க்க முடிகின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

இம்மாதிரியான சூழ்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல்கள் சாலையோரத்தில் கைவிடப்பட்டிருக்கின்றன. ஒன்று, இரண்டு அல்ல ஒட்டுமொத்தமாக ஐந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கார்களைப் பற்றிய சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இது தற்போது விற்பனையில் இருக்கும் தலைமுறையின் முந்தைய தலைமுறை மாடலாகும். சில விதிமீறல்களில் ஈடுபட்டதன் காரணத்தினால் இக்காரை போலீஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து கைவிடப்பட்ட காராக அது தற்போது புழுதியடைந்து காணப்படுகின்றது. நீலம் மற்றும் சாம்பல் நிற கலவையில் காணப்படும் இக்கார் அழுக்கு படிந்திருந்தாலும் மனம் கவரும் வகையில் பிராகசமாக காட்சியளிக்கின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

இந்த காரை கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசித்து வரும் பிரபலம் முகமது நிஷாவிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகின்றது. சமீபத்திய தகவலின்படி, இக்கார் தற்போதும் காவலர்களின் பிடியில்தான் இருக்கின்றது. மது போதையில் காரை இயக்கிய குற்றத்திற்காகவே இக்கார் தற்போதும் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி போலீஸாரிடம் அத்துமீறி செயல்பட்ட காரணத்திற்காகவும் இக்கார் போலீஸார் வசம் இருக்கின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்

பிரபல இளம் நடிகையான லீனா மரியா பால் அவர்களுக்கு சொந்தமான காரே இந்த ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம். இவர் கனரா வங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீஸார் இந்த காரை பறிமுதல் செய்திருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் இருக்கும் லீனா மரியா பால்-ன் பண்ணை வீட்டில் இருந்தே போலீஸார் இக்காரை பறிமுதல் செய்திருக்கின்றனர். தற்போது வரை இக்கார் போலீஸார் வசமே இருக்கின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இக்கார் வெகு நாட்களாக பராமரிப்பு இன்றி வெட்டவெளியில் விடப்பட்டிருக்கின்றது. இதனார், அக்கார் தற்போது துருவிற்கு இரையாக ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி சில பாகங்கள் பழுதடையத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, காரின் பனி மின் விளக்கு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பர் II

1980ம் ஆண்டுகளில் விற்பனைக்கு வெளியான மாடலே இந்த ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பர் II. இது ஓர் விண்டேஜ் மாடலாகும். இக்கார் தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அதன் உரிமையாளரே கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ஆனால், கைவிடப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை. இக்கார் சாலையோர கடையொன்றில் இருப்பதை தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் உறுதி செய்கின்றது. 80களில் மிகவும் பிரபலமான காராக வலம் வந்த சில்வர் ஸ்பர்II மாடலுக்கு இந்த நிலைமையா?, நெட்டிசன்கள் புகைப்படத்தை பார்த்துவிட்ட புலம்பி தள்ளுகின்றனர். இந்த காரை தற்போதும் பலர் தங்களில் கராஜில் பாதுகாத்து பொக்கிஷம்போல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோவ்

இந்த கார் கேட்பாரற்று இருப்பதற்கு பின்னால் ஓர் பேய் கதை இருக்கின்றது. ஆம், இந்த காரை அதன் உரிமையாளர் அமானுஷ்ய காரணத்திற்காகவே கைவிட்டுவிட்டதாக, கார் இருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இது வதந்தியாக இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆகையால், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோவ் கைவிடப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவரவில்லை.

ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோவ் மாடலும் விண்டேஜ் மாடலாகும். இக்காரும் தற்போது துருவிற்கு இரையாகத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி சமூக விரோதிகள் சிலர் இக்காரின் கண்ணாடிகள் போன்றவற்றை உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். இருப்பினும், தூசி மங்கிய தங்க புஷ்பத்தைப் போல் அக்கார் காட்சியளிக்கின்றது.

இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை?.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்! மனசே நொந்துடுச்சுங்க!

ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பிரிட்:

1993 முதல் 1996ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த காரே இந்த சில்வர் ஸ்பிரிட் மாடல். இந்த காரில் மிகப்பெரிய 6.75 லிட்டர் வி8 எஞ்ஜினையே ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்தியது. அட்டகாசமான உருவம், பெரிய எஞ்ஜின் ஆகிய காரணங்களால் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போது இந்த மாடல் கேட்பரற்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த புகைப்படத்தை டி-பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here Is A List Of Five Abandoned Rolls Royce Cars In India. Read In Tamil.
Story first published: Saturday, September 26, 2020, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X