இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

இந்தியர்களின் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிஸான் மேக்னைட் கார் நாளை அறிமுகமாக இருக்கின்றது. இக்கார் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

நிஸான் நிறுவனத்தின் புதுமுக காராக மேக்னைட் எனும் புதிய மாடல் அறிமுகமாக இருக்கின்றது. இக்கார் நாளை அறிமுகமாக இருக்கின்றது. இந்தியர்களின் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களில் இதுவும் ஒன்று. இது சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இக்கார் நாளை அறிமுகமாக இருக்கின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

மேலே இருக்கும் அனைத்தும் நாம் அறிந்த தகவல்களே. இந்த கார் ஏன் இந்தியர்களின் எதிர்பார்ப்பில் இடம் பிடித்திருக்கின்றது?, அப்படி என்ன சிறப்பு வசதிகளை இக்கார் தாங்கியிருக்கின்றது என்கிற தகவலை தான் இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம். முதலில் இக்கார் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

அதாவது தற்போது சந்தையில் போட்டி அதிகம் என்பதால் மலிவு விலையைக் கொண்டு இந்திய சந்தையைக் கவர திட்டமிட்டிருக்கின்றது நிஸான். அதேசமயம், சிறப்பு வசதிகளுக்கும் இக்காரில் பஞ்சம் இருக்காது என கூறப்படுகின்றது. அந்தவகையில் இக்காரில் இடம்பெறவிருக்கும் சிறப்பு அம்சங்கள் பற்றியும், நாம் இக்கார் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டியதைப் பற்றியும் இப்பதிவில் காணவிருக்கின்றோம்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

விலை:

தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி இக்கார் ரூ. 5.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 10 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்த காருக்கு போட்டியளிக்கும் வகையில் தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் கியா சொனெட்டின் ஆரம்ப விலை ரூ. 6.79 லட்சங்கள் ஆகும். இதைக் காட்டிலும் குறைந்த விலையிலேயே நிஸான் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

கேமிரா

காரைச் சுற்றி 360 டிகிரி பரப்பளவையும் மிக தெளிவாகக் காண்பிக்கின்ற வகையில் கேமிரா வழங்கப்பட இருக்கின்றது. இது காரை சுற்றிலும் நிகழக்கூடிய நிகழ்வுகளை துள்ளியமாக காரின் உட்புறத்தில் இருக்கும் திரையின் வாயிலாக காண்பிக்கும். இது மிக குறுகிய பாதையில் கூட சுலபமாக பார்க் செய்ய உதவும். இதனை தேவைக்கேற்ப சுழற்றிக் கொள்ள முடியும்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

எஞ்ஜின்:

மேக்னைட் காரை நிஸான் நிறுவனம் இரு விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில், டீசல் எஞ்ஜின் தேர்வு இருக்காது என தெரிகின்றது. இத்துடன், சிவிடி வேகக்கட்டுப்பாடு, ட்யூவல் கிளட்ச் தானியங்கி வேகக் கட்டுப்பாடு கருவி மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட கியர்பாக்ஸ் தேர்வுகளில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

காரின் உருவம்:

காரை ஸ்டைல் மிகவும் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக புருவத்தை போன்று மெல்லியதாக காட்சியளிக்கும் எல்இடி ஹெட்லேம்ப் காருக்கு அட்டகாசமான தோற்றத்தை வழங்குகின்றது. இதுபோன்று பல்வேறு கூறுகள் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. க்ரில், பம்பர், பனி விளக்கு மற்றும் கட்டுமஸ்தான உடல் பேனல்கள் உள்ளிட்டவை இதன் தோற்றத்திற்கு வலு சேர்த்துள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

இரு திரைகள்:

நிஸான் மேக்னைட் காரில் இரு விதமான திரைகள் இடம்பெற இருக்கின்றன. இதில் ஒன்று 7.0 இன்சிலும், மற்றொன்று 8.0 இன்ச் அளவைக் கொண்டிருக்கும். இதில், 7.0 இன்ச்சுடைய திரை டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகும், 8.0 இன்ச்சைக் கொண்ட திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். இதில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இடம்பெற இருக்கின்றன. இதன்மூலம் மேப், மியூசிக் மற்றும் அழைப்பு உள்ளிட்டவ தகவல்களைப் பெற முடியும்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

கிரவுண்ட் கிளியரன்ஸ்:

மேக்னைட் காருக்கு 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் கரடு முரடான சாலைகளை சமாளிக்க இந்த கிரவுண்ட் கிளியரன்ஸே போதுமானது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிஸான் மேக்னைட் நாளை அறிமுகமாகிறது... இக்காரை பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை!

கூடுதல் தொழில்நுட்பங்கள்:

தொழில்நுட்பங்கள் வசதிகளும் இக்காரில் ஏராளமாக வழங்கப்பட இருக்கின்றது. காற்று சுத்திகரிப்பான், ஒயர்லெஸ் சார்ஜர், இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கூறிய வசதிகளே நாளை அறிமுகமாக இருக்கும் நிஸான் மேக்னைட் காரில் நாம் கவனிக்க வேண்டிய அம்சங்களாக இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Here Is Top Things To Know About All New Nissan Magnite. Read in Tamil.
Story first published: Tuesday, December 1, 2020, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X