நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 16 ஆண்டு கால பழைய ஹிந்துஸ்தான் கான்டெஸா காரை புத்தம் புதிய ஸ்டைலுடைய வாகனமாக மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

இன்றைய இந்தியாவில் பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி ஆகிய நிறுவனங்களின் சொகுசு கார்கள் அதிகம் காணப்பட்டாலும், ஆரம்பக் கட்டத்தில் சொகுசு வாகன விரும்புகளின் தேர்வில் ஹிந்துஸ்தான் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளே முதல் இடத்தில் இருந்தன. அதிலும், ஹிந்துஸ்தான் நிறுனவத்தின் கான்டெஸா காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

இது ஓர் செடான் ரக, கட்டுமஸ்தான உடல்வாகைக் கொண்ட காராகும். இதன் தோற்றம் மற்றும் எஞ்ஜின் திறன் உள்ளிட்டவையே இந்திய சந்தையில் அக்காரை நீண்ட கால விற்பனையில் தக்க வைக்க உதவியது. விற்பனைக்கு மட்டுமின்றி நல்ல வரவேற்பை பெறுவதற்கும் இவையே தூண்டு கோலாக இருந்தன. இதன் காரணத்தினாலயே தற்போதும் இந்த காரை நம்மால் இந்திய சாலையில் காண முடிகின்றது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

அதில், ஒரு சில கார்கள் நல்ல பராமரிப்பிலும், ஒரு சில துருப்பிடித்தும் காணப்படுகின்றன. அம்மாதிரி, குப்பைத் தொட்டியாகவே மாறியிருந்த ஓர் கான்டெஸா காரைதான் தனியார் நிறுவனம் ஒன்று புதுப்பித்து புத்துயிர் வழங்கியுள்ளது. இந்த புத்துணர்வால் ஹிந்துஸ்தான் கான்டெஸா புதிய அவதாரத்திற்கு அப்கிரேட் ஆகியிருக்கின்றது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

இதனை தமிழகத்தைச் சேர்ந்த மாடிஃபை நிறுவனமான மோட்ஸ்டர் நிறுவனம்தான் கஸ்டமைஸ் செய்தது என்பது கூடுதல் சிறப்பான தகவல். இந்த நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை பகுதியை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

அரிய பொக்கிஷமான ஹிந்துஸ்தான் கான்டெஸா கார் நீண்ட காலமாக குப்பைத் தொட்டி அருகில் கைவிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்த மோட்ஸ்டர், அதனை புதுப்பிக்க எண்ணியது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

ஆனால், அந்த காரே முழுவதுமாக சிதிலமடைந்து துருப்பி இருந்தது. குறிப்பாக, அக்காரின் கதவுகள் மற்றும் பான்னட் போன்ற மேற்கூரை அமைப்புகள் முழுவதுமாக துருப்பி பிடித்து நாசமாகியிருந்தன. இருப்பினும், இந்த சவாலான பணியைக் கையிலெடுத்த மோட்ஸ்டர் மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றையும் அந்த நிறுவனம் யுடியூப் வாயிலாக வெளியிட்டுள்ளது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

கைவிடப்பட்டிருந்த கான்டெஸாவின் பல பாகங்கள் துருப்பிடிக்கப்பட்டிருந்ததால், ஒரு சில மட்டும் கைவிடப்பட்டன. அதாவது, இதற்கு பின்னர் பயன்படவே லாயக்கற்றவை என்று கருதப்பட்ட பாகங்கள் மட்டும் நீக்கப்பட்டன. அந்தவகையில், வீல், பான்னட் மற்றும் காரின் நான்கு கதவுகளும் நீக்கப்பட்டன.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

அதில், ஒரிஜினல் வீலுக்கு பதிலாக பிஎம்டபிள்யூ 5 செரீஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 17 இன்ச் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, கதவு, பான்னெட் மற்றும் ஃபென்டர் உள்ளிட்டவையும் கஸ்டமைஸ் செய்யப்பட்டு பயன்டுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வேறு சில பாகங்கள் பட்டி-டிங்கரிங் பார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

அதேசமயம், உடல் பாகங்கள் மட்டுமின்றி சில மெக்கானிக்கல் அம்சங்களும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் முற்றிலுமாக சேதமடைந்திருந்தன. அவற்றையும் மோட்ஸ்டெர் நிறுவனம் நீக்கிவிட்டு, புதிய கருவிகளை பயன்படுத்தியிருக்கின்றது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

குறிப்பாக உருமாற்றம் வழங்கப்படுவதற்கு முன்பு அக்காருக்கான மாதிரி வரைபடம் வரையப்பட்டு, அதன் பின்னரே மாடிஃபிகேஷன் பணி மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், காரின் துருக்களை நீக்க மட்டுமே 400 மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருப்பதாக மோட்ஸ்டர் தெரிவித்துள்ளது. இதன் பின்னரே, ஒவ்வொரு பகுதிக்கும் தனி கவனம் செலுத்தப்பட்டு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கின்றது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

இதன்படி, காரின் வெளிப்புறத்திற்கு மட்டுமின்றி உட்புறத்திற்கும் மாற்றங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், வெளிப்புறத்தில் வழங்கப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாகவே அக்கார் மிகவும் கவர்ச்சயான ஓர் தயாரிப்பாக மாறியுள்ளது. அதிலும், குறிப்பாக, காரின் வண்ண மயமான ஹெட்லைட் வேற லெவலுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

அதாவது, ஹிந்துஸ்தான் கான்டெஸா காரை ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படங்களில் வரும் கார்களைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த தோற்றத்திற்காக போர்ஷே கார்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற மிட்நைட் பிளாக் நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், காரின் அலாய் வீல்களுக்கு ஸ்மோக்ட் பெயிண்டிங் வேலை கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இவற்றின் காரணமாக இதுவரை இந்தியச் சந்தைக் கண்டிராத ஹிந்துஸ்தான் கான்டெஸா காராக அது மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து, லேசான மாற்றங்கள் இன்டீரியருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, காரின் இருக்கை முதல் ஸ்டியரிங் வீல் வரை பல அம்சங்கள் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. இதனால், 16 ஆண்டுகளாக பழைய கான்டெஸா 18 வயது குமரிப் பெண்ணைப் போன்று மாறியுள்ளது.

Most Read Articles
English summary
Hindustan Contessa Restored By Modster. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X