கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

ஹோண்டா அமேஸ் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

மிகவும் பிரபலமான செடான் ரக காராக விளங்கி வரும் அமேஸ் (Amaze), கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 4 லட்சம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகியுள்ளதாக ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் ஹோண்டா நிறுவன கார் என்ற பெருமையை அமேஸ் பெற்றுள்ளது.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

தற்போது இரண்டாவது தலைமுறை அவதாரத்தில் உள்ள அமேஸ், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதால், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் செடான் ரக கார்களின் விற்பனை குறைந்த நிலையிலும் கூட, இந்த காம்பேக்ட் செடான் அமோகமாக விற்பனையாகி வருவது ஹோண்டா நிறுவனத்திற்கு மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம்தான்.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

ஹோண்டா அமேஸ் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருப்பது குறித்து, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனரான ராஜேஸ் கோயல் கூறுகையில், ''இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக ஹோண்டா அமேஸ் திகழ்கிறது.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

எங்கள் தொழிலின் முக்கிய தூண் என ஹோண்டா அமேஸை குறிப்பிடலாம். எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பு மற்றும் டீலர் பார்ட்னர்களின் ஆதரவு காரணங்களால்தான், 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹோண்டா அமேஸால் எட்ட முடிந்துள்ளது'' என்றார். பராமரிப்பு செலவு மிகவும் குறைவு என்பதும் கூட ஹோண்டா அமேஸின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

ஹோண்டா அமேஸ் காரில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷன்களை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

முதல் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை விற்பனையில் இருந்த முதல் தலைமுறை கார், மொத்தம் 2.6 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதன்பின் இரண்டாவது தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

அப்போதில் இருந்து தற்போது வரை மொத்தம் 1.4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை 2வது தலைமுறை ஹோண்டா அமேஸ் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹோண்டா அமேஸ் கடந்துள்ளது. குடும்பங்களுக்கு ஏற்ற கச்சிதமான செடான் ரக காராக ஹோண்டா அமேஸ் திகழ்ந்து வருகிறது.

கஸ்டமர்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா அமேஸ்... என்னனு தெரியுமா?

தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடும்பங்களுக்கு ஏற்ற கார்களுக்கான தேவை வரும் மாதங்களில் உயரும் என ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக ஹோண்டா அமேஸின் விற்பனை இன்னும் கணிசமாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda #honda amaze
English summary
Honda Amaze Compact Sedan Cumulative Sales Cross 4 Lakh Units. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X