சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

சுதந்திர தினத்திலிருந்து துவங்கும் பண்டிகை காலத்தை மனதில் வைத்து சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஹோண்டா கார் நிறுவனம் வழங்குகிறது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சேமிப்புச் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

கொரோனா பிடியிலிருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. மேலும், பண்டிகை காலம் துவங்குவதை மனதில் வைத்தும் பல்வேறு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனம் பல்வேறு சேமிப்புச் சலுகைகளை தனது பிஎஸ்-6 கார் மாடல்கள் மீது வழங்குகிறது. விலையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவற்றுடன் இந்த சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.27,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. பழைய காரை மாற்றி புதிய அமேஸ் கார் வாங்குவோருக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும், கூடுதல் ஆண்டுக்களுக்கான வாரண்டியும், ரூ.3,000 நேரடி தள்ளுபடியும் பெறும் வாய்ப்பும் உள்ளது.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ஹோண்டா சிட்டி (நான்காம் தலைமுறை)

நான்காம் தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1.60 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். எஸ்வி மற்றும் வி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.25,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெறும் வாய்ப்புள்ளது.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் வி சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.90,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. இதில், ரூ.55,000 வரையில் தள்ளுபடியாகவும், ரூ.35,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். அதேபோன்று, விஎக்ஸ் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.70,000 வரை தள்ளுபடியும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போன்ஸ சலுகையாகவும் பெறும் வாய்ப்பு உள்ளது.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

டாப் வேரியண்ட்டுகளான இசட் மற்றும் இசட்எக்ஸ் சிவிடி வேரியண்ட்டுகள் மீது ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.60 லட்சம் வரையிலான தள்ளுபடி சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இசட்எக்ஸ் சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ,1.10 லட்சம் தள்ளுபடியும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போன்ஸ் சலுகை பெறும் வாய்ப்புள்ளது.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிவிக் காரின் டீசல் வேரியண்ட்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி!

வரும் ஆகஸ்ட் 31ந் தேதி வரை இந்த சேமிப்புச் சலுகைகள் அமலில் இருக்கும். அதற்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இந்த சேமிப்புச் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொண்டு விபரங்களை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda Cars India has announced a host of offers during the month of August 2020. Although, the offers are similar to the ones from the previous month. This month the brand is offering more benefits on select models in its line-up.
Story first published: Wednesday, August 12, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X